பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”
முந்தைய நாளின் தொடர்ச்சியைக் காட்டினர். அங்கே சரவணனும் இருந்தார். ‘என்னடா இது? நேத்து தானே வெளிய போனாரு?” எனா யோசித்துக் கொண்டே தான் பார்க்க வேண்டியிருந்தது. காலையிலேயே மதுவும், அபியும் சண்டைக்குத் தயாராக நின்றனர். கேப்டன் முகின், ‘அங்க என்னம்மா சத்தம்?’ எனக் கேட்கவும், ‘சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்’ எனச் சொன்னாலும், அது சண்டைக்கு முந்தின லெவலில் இருந்தது தான் உண்மை. அபி முகத்தைக் காண்பித்து விட்டுப் போக, முகின் பின்னாடியே சமாதானப்படுத்தப் போனார். இந்த கவினைப் பார்த்து அவரை மாதிரியே எல்லா ஆண்களும் இருப்பாங்க என நினைத்து விட்டார் போல அபி. மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்தால், "இல்ல மச்சா" என உட்கார்ந்து, இரண்டு மணி நேரம் பேசணும் என எதிர்பார்க்கிறார்.
ஆனா முகின்ல் அப்படி இல்லை. ‘கோச்சுக்கறியா, சரி கோச்சுக்கோ. நான் போய் ஃப்ரூட்டி குடிச்சுட்டு வரேன்” எனப் போய் விடுகிறார். அதே சமயம் தேவையில்ல...