32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Bigg Boss Tamil Season 3

73 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 5 / 5
செய்திகள் வரிசை (பக்கம் 5)
பிக் பாஸ் 3 – நாள் 30 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 30

காலையில் வெளிய வந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே திகைத்துப் போய்விட்டனர். அட்டகாசமான கிராமிய செட் போடப்பட்டிருந்தது. ‘ஆஹா இன்னிக்குப் பெருசா ஒரு டாஸ்க் கொடுக்கப் போறாங்க, நிறைய கன்டென்ட் கிடைக்குமென நம்பி உட்கார்ந்தேன். அதற்கேற்ற மாதிரி டாஸ்க்கும் வந்தது. வீட்டை இரண்டு அணியாகப் பிரித்து, இரண்டு கிராமமாக மாற்றினர். இந்த இரண்டு கிராமத்துக்கும் ஒத்துக்காது, எப்பொழுதும் சண்டை. வீட்டில் இருக்கின்ற கிச்சன் ஏரியாவுக்கு, மதுமிதா தலைவி, பாத்ரூம் ஏரியாவுக்கு சேரன் தான் தலைவர். இந்த அணியைச் சேர்ந்தவங்க […]

24/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 25 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 25

முந்தின நாள் கவின் – சாக்‌ஷி – லியா பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை. சாக்‌ஷியிடம் பேச வேண்டுமெனக் கவின் பாத்ரூம் ஏரியாவில் தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார். சாக்‌ஷி உள்ளே உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கார். ஷெரின் சமாதானப்படுத்தி கூட்டிக் கொண்டு போகிறார். அப்பவும் கவின் அங்கேயே இருக்கிறார். ‘நீ எனக்காக வெயிட் பண்ணாத. போய் சாப்புடு’ எனச் சொல்லிவிட்டுப் போனார் சக்‌ஷி. கோவமாக இருந்தாலும் பாசமாக இருக்காங்களாம். அடுத்து 9 மணிக்கு மேலே சாக்‌ஷி பாத்ரூம் ஏரியா […]

19/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 24 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 24

‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்’ என்ற பழைய பாட்டோடு ஆரம்பித்தது நாள். ‘இதுக்கு என்னத்த ஆடறது?’ என நினைத்த பாதி பேர் வேடிக்கை பார்க்க, சாண்டியும் சாக்‌ஷியும் மட்டும் கடைசி வரை ஆடினர். நேற்றைய பஞ்சாயத்துக்களின் மிச்சங்கள் இன்னிக்கும் பேசப்பட்டது. ‘கவின்-மீரா பிரச்சினையில என் ஃபுல் சப்போர்ட்டும் உனக்கு தான் பேபி’ என சாக்‌ஷிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார் மோகன். இந்த ரேஷ்மா நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என்றுதான் தெரியவில்லை. அந்தப் பக்கம், […]

18/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 23 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 23

‘ஜிங்குனமணி’ பாடலுடன் விடிந்தது பொழுது. பஞ்சாயத்து 1 மோகன் தன் வரவழைக்கப்பட்ட ட்ரேட்மார்க் சோகத்தோட சாக்‌ஷியிடம் பேசிக் கொண்டிருந்தார். நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அதாவது பாத்ரூம் க்ளீனிங் டீம்ல இருக்கின்ற மோகனுக்கு அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘ஏதோ அலர்ஜியாக இருக்கு. அதனால் என்னை குக்கிங் டீம்ல போட்ருங்க’ என சாக்ஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கேப்டன் சாக்‌ஷி, ‘நான் பார்த்துக்கறேன்’ எனச் சொல்லி, அவரை வெசல் வாஷிங் டீம்ல போடுகிறார். சரவணன் ஏற்கனவே குக்கிங் […]

17/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 22 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 22

‘உரசாதே’ பாடலுடன் தொடங்கியது நாள். கூடுதல் உற்சாகத்துடன் ஆடினார் லியா. வர வர இந்த சாண்டி டான்ஸ் ஆட வருவதே இல்லை. பாடல் முடியும் தருவாயில் ஷெரின் அருகில் நின்ற சாண்டி, தமிழ் சினிமாவில் வருவது போல் குடையால் அவர்களை மறைத்துக் கொண்டு குடையை மட்டும் ஆட்டிக் கண்பித்தார். அதை சரியாக கேட்ச் செய்த கேமரா, எடிட்டிங் டீமுக்கு வாழ்த்துகள். காபி போட லேட்டானதால், கிச்சன் ஏரியாவில் காபி, காபி என்று கெரொ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது […]

16/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 21 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 21

அட்டகாசமான உடையில் கமல் என்ட்ரி கொடுத்தார். நேராகவே நிகழ்ச்சிக்குள் போய் விட்டார். தர்ஷன், மீரா இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றிக் கேட்ட போது தான், பார்வையாளர்களுக்கே சில விஷயம் தெரிய வந்தது. அதாகப்பட்டது மீரா தர்ஷன் அழகுல மயங்கி, ‘எங்க அம்மாட்ட வந்து பேசு; என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ’ எனச் சொல்ல, ‘இந்தாம்மா எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. இத்தோட இந்தப் பேச்சை விட்டுடு’ என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிருக்கார் தர்ஷன். மீரா அந்தப் பேச்சை விடவில்லை. […]

15/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 14 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 14

முதலில் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். அது கமலின் உற்சாகம். கலக்கலான ட்ரெஸ்ஸொட செம்ம எனர்ஜியோடு இருந்தார். நேரடியாக நேற்றைய நிகழ்வுகளோட தொடர்ச்சி நடந்தது. அபிராமி மாற்றி ஓட்டு போட்டது தான் ஹாட் டாபிக். வெளியே சாக்‌ஷியோட பேசிக் கொண்டிருந்த அபி, ‘இது என்னோட சொந்த முடிவு, அந்த டைம்ல எனக்கு அந்த முடிவு சரியா இருந்தது. மீரா கூட தான் எனக்கு பிரச்சினை’ எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வனிதா அங்கே வந்தார். அப்பொழுது ஆரம்பித்து […]

08/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 13 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 13

ஒரு புதிய நாள், சாண்டியோட பிறந்த நாள் வாழ்த்துக்களோட ஆரம்பித்தது. முதல் டாஸ்க் அபிராமி மத்த ஹவுஸ்மேட்ஸுக்கு நவரசங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அபிராமி என்ன சொல்லிக் கொடுத்தாங்களோ தெரியவில்லை. ஆனால், சாண்டி + பாத்திமா ஜோடி அப்ளாஸ் அள்ளிவிட்டது. கிச்சனில் வனிதா கிட்ட மதுவைப் பற்றி கம்ப்ளெயின்ட் பண்ணிக் கொண்டிருந்தார் மீரா. புடவை கட்டிவிட வந்ததாகவும், ஆனா கடைசி நேரத்தில் மாட்டேன் எனச் சொல்லி பாத்திமா தான் ஹெல்ப் பண்ண வந்ததாகவும் மீரா சொல்ல, வனிதா […]

07/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 12 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 12

குலேபகாவலி பாடலுடன் பொழுது ஆரம்பித்தது. முதல் டாஸ்க் சரவணன் ஹவுஸ்மேட்ஸுக்கு கோழி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர் காண்பித்த டெமோவே நல்லா இருந்தது. பிறகு அபிராமி கோழி பிடித்துக் காட்டினார். இந்தப் புள்ள மட்டும் அந்த குரூப்பை விட்டு வெளியே வந்தார் என்றால், ‘சார் அபிராமி சார், கோழி பிடிக்கிறாங்க சார்’ எனச் சொல்லி ஒரு கவிதை எழுதிருக்கலாம். அடுத்து, டைனிங் டேபிள்ல சாப்பிட்டுக் கொண்டிருந்த மது, ‘எனக்கு ஓட்ஸ் பிடிக்காது, போனவாரம் பழைய சாப்பாடு […]

06/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 11 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 11

பத்தாம் நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது. நேற்று மோகனிடம் ஏதாவது வேலை என்றால் கேப்டன் எனும் முறையில நீங்க வந்து சொல்லுங்க எனச் சொன்னதையே இன்று வனிதாவிடம் சொல்லி, வனிதாவோட பேட்புக் லிஸ்ட்ல நேரடியாக இடம் பிடித்தார் சேரன். அதை அவ்வளவு ஈசியா எடுத்துக் கொள்ளாத வனிதா, ‘எனக்கும் சேரனுக்கும் இனிமே பேச்சுவார்த்தை இல்லை. அன்னம் தண்ணி புழங்க மாட்டேன்’ என இன்ஸ்டன்டாகத் தீர்ப்பு கொடுத்தார். ‘நான் தான் கேப்டன், என் வயசுக்கு மரியாதை கொடுக்கனும், […]

05/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 10 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 10

நேற்று விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த எபிசோட். மீரா, மது, முகின், லொஸ்லியா இவங்க பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்த சாக்‌ஷி, நேராக வனிதாவிடம் போய், அபிராமிகிட்ட பேசாதே என முகினுக்கு அட்வைஸ் பண்றதா சொல்றாங்க. அந்த விஷயத்துக்கு வனிதா ரியாக்ட் பண்ணினதை நேற்றே பார்த்தோம். இன்னிக்கு எபிசோட்ல வனிதா நேரடியாக முகின் கிட்ட மீரா கிட்ட பேசினதை பத்தி விசாரிக்கறாங்க. முகினும் வரிசையா எல்லாம்ம் சொல்லிக் கொண்டே வருகிறாரு. ‘நீ அபிராமி கிட்ட பேசக்கூடாது […]

04/07/2019 Dinesh R
பிக்பாஸ் 3 – நாள் 9 பிக் பாஸ்

பிக்பாஸ் 3 – நாள் 9

ஓ மை டார்லிங் பாடலுடன் ஆராவாரமாக ஆரம்பித்தது நாள். நடனம் ஆடுவதில் யாருக்கும் ஆர்வம் இல்லையெனச் சொன்னது யாருக்குக் கேட்டதோ இல்லையோ பிக்பாஸுக்குக் கேட்டுவிட்டது. நேற்று டோஸ் கொடுத்துருப்பாரு போல். இன்று சரவணன் வரைக்கும் எல்லாரும் ஆடிக் கொண்டிருந்தார்கள். காலை முதல் டாஸ்க் லெட்டர் வந்தது. மது மத்த ஹவுஸ்மேட்ஸ்க்கு மோட்டிவேசன் ஸ்பீச் கொடுக்கனும். ‘லொஸ்லியா நல்லா பாடுவார்; அவருக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்’ என வந்தது. அதே மாதிரி தான் மற்றவர்களுக்கும். ஆனா பிரச்சினை […]

03/07/2019 Dinesh R
பிக்பாஸ் 3 – நாள் 8 பிக் பாஸ்

பிக்பாஸ் 3 – நாள் 8

வழக்கமான பாடலுடன் ஆரம்பித்தது. லாஸ்லியா, மது இரண்டு பேரைத் தவிர பெரிதாக யாரும் ஆர்வத்தோடு ஆடுவதில்லை. மீரா தியானம் மாதிரி ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க. சாண்டி பக்கத்தில் அமர்ந்து, “என்ன கருமம்டா இது” என்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தார். நேத்து பிரச்சினையின் போது, ‘நீ தமிழ்பொண்ணு தானே? ஏன் புடவை கட்டாம மாடர்ன் ட்ரெஸ் போட்ருக்க?’ என சாக்‌ஷி கேட்டதாலா அல்லது இல்ல தற்செயலா எனத் தெரியவில்லை; மது புடவையில் இருந்தாங்க. அதில்லாமல் மெளன விரதம் வேறு. […]

02/07/2019 Dinesh R