Shadow

பிக் பாஸ் 3 – நாள் 22

‘உரசாதே’ பாடலுடன் தொடங்கியது நாள். கூடுதல் உற்சாகத்துடன் ஆடினார் லியா. வர வர இந்த சாண்டி டான்ஸ் ஆட வருவதே இல்லை. பாடல் முடியும் தருவாயில் ஷெரின் அருகில் நின்ற சாண்டி, தமிழ் சினிமாவில் வருவது போல் குடையால் அவர்களை மறைத்துக் கொண்டு குடையை மட்டும் ஆட்டிக் கண்பித்தார். அதை சரியாக கேட்ச் செய்த கேமரா, எடிட்டிங் டீமுக்கு வாழ்த்துகள்.

காபி போட லேட்டானதால், கிச்சன் ஏரியாவில் காபி, காபி என்று கெரொ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது சரவணனும், மோகனும் சைகையில் பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த காட்சியில் மோகன் சரவணன் பற்றிப் புகார் சொல்ல ஆரம்பித்தார். சாக்‌ஷி, ரேஷ்மா அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். தன்னைத் தொடர்ந்து அவமதிப்பதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை எனவும் சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் மோகன்.

இல்ல தெரியாமல்தான் கேக்கறேன். இப்படி யாராவது நம்மளை அவமானபடுத்தினால் முதலில் நமக்குக் கோவம் தானே வரனும்? ஆனா இவர் அழுறாரு! அழுதால் கட்டிபிடிப்பாங்க என நினைத்து அழுகிறாரா, இல்லை கட்டிபிடிக்கவேண்டும் என நினைத்து, அதுக்காக அழுகையை வர வைத்துக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பார்க்கிற நமக்கு உச்சபட்ச எரிச்சல் வருது. சின்ன குழந்தைகளுக்கு கூட குட் டச், பேட் டச் சொல்லி கொடுக்கற காலத்துல, தன் மகள் வயசு பொண்ணுங்களை இப்படித் தொடர்ந்து தொட்டுத் தொட்டுப் பேசுவதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. பேரைக் கெடுத்துக் கொள்வதற்கு முன், இதை அவரு நிறுத்திக் கொள்ளவேண்டும். ஆனா ருசி கண்ட பூனை என்ன செய்யுமென எல்லாருக்கும் தெரியும்.

சேரன் வந்து என்னவெனக் கேட்கிற போது கூட சாக்‌ஷி கிட்ட இருந்து விலகவே மாட்டேங்கிறார். ‘இப்ப எதுக்கு இங்க வந்த?’ போன்ற ஒரு பார்வையில் தான் சேரன்கிட்ட பிரச்சினையைச் சொன்னார். இது சரவணன் காதுக்குப் போனது. ‘நான் சும்மா சைகையில் தான் பேசிக் கொண்டிருந்தேன். தப்பாக ஒன்னும் சொல்லலையே’ என நேராக மோகனிடம் வந்தார். ‘இத்தனை பேரு இங்க காபி கேக்கறாங்களே, நீங்க மட்டும் தனியா காபி போட்டு குடிக்கறிங்களே, உங்களுக்கு அறிவில்லையா என சைகையில் கேட்டேன். அது உங்களை ஹர்ட் பண்ணிருந்தா மன்னிச்சிருங்க’ எனச் சொல்லி தற்காலிகமா அந்தப் பிரச்சினையை முடித்து வைத்தார்.

நேற்றைய சரவணனின் செயல்பாடுகளில் நிறைய இடத்துல வனிதாத்தனம் தெரிந்தது. ‘இவங்க கிட்ட எல்லாம் அப்படித்தான் நடந்துக்கனும்னு நினைச்சு செய்தாரா? இல்ல வீட்டுக்குப் போக முடியலங்கற கோவமா?’ எனத் தெரியவில்லை. அடுத்ததாக மதுவிடமும் எரிந்து விழுந்தார். மது குழம்பு வைக்க போக, ‘லேட்டாகிடுச்சு, காய்கறி எதுவும் இல்ல, அதனால தள்ளு நான் பார்த்துக்கறேன்’ என அவரே செய்தார். இதில் கொஞ்சம் ஹர்ட் ஆன மது, ‘நாளைக்கு யார் சமைப்பாங்க?’ எனக் கேட்ட போது, ‘என் பேச்சை யார் கேக்கறாங்களோ அவங்க தான் செய்வாங்க’ எனச் சொல்ல, மது பெட்ரூமுக்கு வந்து அழ ஆரம்பித்தார்.

சாக்‌ஷியிடமும் புகார் சொன்னார். இதை உடனே புரிந்து கொண்ட கிச்சன் டீம், மதுவைக் கூப்பிட, ‘நான் வரமாட்டேன்’ என மது சொல்ல, அவரைச் சமாதானபடுத்தும் படலம் நடந்தது. ‘நான் உன்னைக் கலாய்ச்சேன்’ எனச் சொன்னதை மது நம்பவில்லை. இதில் ஒரே நல்ல விஷயம், மற்றவர்கள் போல் கத்தி ஆர்பாட்டம் பண்ணாமல், இயலாமையில் அழ மட்டுமே செய்தார் மது. அதனால் பிரச்சினை பெரிதாகவில்லை.

சரவணனின் குழந்தை போட்டோவை அனுப்பிருந்தார் பிக்பாஸ். ஏற்கெனவே கேமிரா மூலமாகக் கேட்டிருப்பார் போல, ஸ்டோர் ரூம்ல அதை எடுத்த தர்ஷன் அதை மறைத்து விளையாட, சரவணன் சுலபமாகக் கண்டுபிடித்துவிட்டார். எல்லோரும் குழந்தையின் ஃபோட்டோவைப் பார்த்து சந்தோஷபட்டனர். அப்ப மது கண்கலங்க ஆரம்பிக்க, ரேஷ்மாவும், லியாவும் ஆறுதல் சொன்னார்கள். மூன்று குழந்தைகளைப் பெற்றுத் தாய்மையைப் பரிபூரணமாக அனுபவித்த ரேஷ்மா, திருமணம் ஆகி தாயாக வேண்டுமெனக் காத்திருக்கும் மது, தாய்ப்பாசத்துக்கு ஏங்கும் லியா, மூன்று பேரும் ஒரே ப்ரேமில், அதுவும் ஆனந்தக்கண்ணீருடன் (இட்ஸ் ஜஸ்ட் எ கேர்ள் திங், யூ நோ). விடுவாரா பிக்பாஸ்? நமக்கே உணர்வுபூர்வமாக இருந்தது.

இந்த வாரத்துக்கான எவிக்சன் ப்ராசஸ் ஆரம்பித்தது. வகை தொகையில்லாமல் எல்லோரிடமும் வம்பிழுத்து வைத்திருக்கும் மீரா பேரைத்தான் அத்தனை பேரும் சொன்னார்கள். கிட்டத்தட்ட 11 ஓட்டு. மோகன், ரேஷ்மா இரண்டு பேரும் எதிர்பார்த்த மாதிரியே சரவணன் பேரைச் சொன்னார்கள்.

சாரி சொல்றதும், மன்னிப்பு கேக்கறதும் எவ்வளவு ஃபார்மாலிட்டியாக மாறியுள்ளதென இந்த பிக்பாஸைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஒரு தவறு நடந்துவிட்டது. அதற்காக சம்பந்தப்பட்ட நபர் மன்னிப்பு கேட்கிறார், இன்னொரு நபரும் அதைப் பெருந்தன்மையாக ஏத்துக் கொள்கிறார். அதன் புன், அதைப் பற்றிப் பேசக்கூடாது. மறுபடியும் அந்தப் பிரச்சனையைப் பேசிக் குத்திக் காட்டக்கூடாது. அதை தான் செய்வோம் என்றால் அப்புறம் எதற்கு மன்னிப்பு? கடந்து போக வேண்டுமென யாருமே நினைப்பதில்லை. தமிழ்ப்பொண்ணு எனப் பேசியதற்கு மது ஷெரின் கிட்ட மன்னிப்பு கேட்டார். இப்ப வரைக்கும் அதைச் சொல்லிக் காட்டிக் கொண்டு தான் இருக்கார். அபி மன்னிப்பு கேட்டும் சாக்‌ஷி எதையும் மறப்பதாக இல்லை. இந்த வீட்டுல இதுவரைக்கும் மன்னிப்பு கேட்காத ஒரே ஆள் மீரா தான். எல்லாருமே ஏதோ ஒரு விஷயத்தில் மற்றவர்களை ஹர்ட் பண்ணி, அதைப் புரிந்து சாரி கேட்ருப்போம். மன்னிக்கவே முடியாத தவறுகள் என எதுவுமே இல்ல.

இன்று மோகன், ரேஷ்மா செய்ததும் அதே தான். மோகன் தான் ஹர்ட் ஆனதாகச் சொன்னவுடனே, சரவணன், ‘தான் வேணும்னு பண்ணல. இருந்தாலும் உங்களை ஹர்ட் பண்ணினதுக்கு மன்னிச்சுருங்க’ எனச் சொன்னதற்குப் பின்னும், சரவனன் பேரை நாமினேட் பண்ண மோகன் அதே காரணம் தான் சொன்னார்.

‘எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்’ என தர்ஷன் பேரை மீரா சொன்ன போது, சிரிப்பு தான் வந்தது. இறுதியில் மோகன், சரவணன், சேரன், அபி மற்றும் மீரா இந்த வார நாமினேஷில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்தார்.

அடுத்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து ஒரு கேம் விளையாடினார்கள். ‘உன்னைச் சந்தித்ததே என் பாக்கியம், உன்னைப் பார்க்கமலே இருந்திருக்கலாம்’ – இப்படி கான்ட்ராஸ்டான இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு ஹவுஸ்மேட் ஒருவரைப் பற்றிக் காரணத்தோடு சொல்ல வேண்டும். இதிலும் ஏகோபித்த ஆதரவு பெற்றவர் மீரா தான். ஜாலியாக போன இந்த விளையாட்டையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு கடமையாற்றினார் மீரா. தன் முறை வந்தவுடன் பதில் சொன்னவர், தன் பெயரைச் சொன்னவர்களுக்கு பதில் சொல்வதாக ஆரம்பித்தார்.

உண்மையில் மீரா கோபிநாத் போல மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக போகலாம். மூச்சு விடாமல் அவ்வளவு சரளமாக வார்த்தைகள் வந்து விழுகிறது. இந்தத் திறமையை அவர் நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் அவருக்குத்தான் நன்மை. ஆனால் அவர் கான்வர்சேஷனைக் கூட ப்ரசென்டேஷனாக நினைத்துக் கொண்டு பேசுவது தான் எரிச்சலை வரவழைக்கிறது.

சாண்டி & கோ எப்போதும் போல் பாடல் வரிகளை மாற்றிப் பாடி என்ஜாய் செய்தனர்.

கவினை அண்ணா எனச் சொல்லச் சொல்லி லியாவை எல்லாரும் கெரோ செய்ய, ‘கவின் அண்ணா’ எனக் கூப்பிட்டு கவினை பேஸ்தடிக்க வைத்தார் லியா.

மொத்தத்தில் நேற்று ஒரு நல்ல நாள்.

என்டர்டெயின்மெண்ட் சாண்டி & கோவுக்கு ஷொட்டு;

கலாய்ப்பதாக நினைத்து வாயை விடும் சரவணனுக்கு ஒரு குட்டு;

சரவணன் குழந்தை போட்டோ குடுத்த பிக்பாஸ் தான் ஹிட்டு.

– மகாதேவன் CM