Search

பிக் பாஸ் 3 – நாள் 21

அட்டகாசமான உடையில் கமல் என்ட்ரி கொடுத்தார். நேராகவே நிகழ்ச்சிக்குள் போய் விட்டார். தர்ஷன், மீரா இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றிக் கேட்ட போது தான், பார்வையாளர்களுக்கே சில விஷயம் தெரிய வந்தது. அதாகப்பட்டது மீரா தர்ஷன் அழகுல மயங்கி, ‘எங்க அம்மாட்ட வந்து பேசு; என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ’ எனச் சொல்ல, ‘இந்தாம்மா எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. இத்தோட இந்தப் பேச்சை விட்டுடு’ என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிருக்கார் தர்ஷன். மீரா அந்தப் பேச்சை விடவில்லை. ‘வீட்டில இருப்பவரிடம் எல்லாம் வேற சொல்லிக் கொண்டிருக்கிறாங்க’ என தர்ஷன் கம்ப்ளையிண்ட் பண்ணினார்.

‘அன்னிக்கு காலையில 6 மணி இருக்கும்’ எனப் பேச ஆரம்பித்து, மீரா முடித்த போது, கமல் உட்பட பார்த்தவர் அனைவருமே ரவிமரியா நிலைமையில் தான் இருந்தனர். அப்படி ஒரு நான்-ஸ்டாப் பேச்சு. இந்த விஷயம் அரசல் புரசலா தான் நமக்குக் காட்டப்பட்டது. ஆனா மீரா பேசும் போது அதிலேயே சில விஷயங்கள் பொய் எனத் தெரிகிறது. கமல் ரியாக்ஷன் அதகளம். ‘இதுக்கு மேல விட்டா தாங்காது’ எனப் பேச்சை மாத்திட்டார்.

‘இந்தக் கால இளைஞர்கள் எவ்வளவு ஸ்பீடா இருக்காங்க?’ என சேரனோடு சிலாகித்து கொண்டார்.

அடுத்தது சரவணன் கோபப்பட்டதைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘நியாயமானது தான்’ எனப் பாராட்டிப் பேசின கமலிடம், ‘நான் வீட்டுக்குப் போறேன். என்னை விட்ருங்க’ எனச் சொன்னார் சரவணன். ‘முதல்ல குழந்தை இருக்கான், அவனை பார்க்காம இருக்க முடில, அவனுக்கும் எப்படி இருக்குமோ தெரில’ எனச் சொன்னவர், அதுக்கப்புறம் தான் உண்மையான காரணத்தைச் சொன்னார். இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் விட்டுவிட்டு வந்ததால், என்ன நடக்குமோ எனப் பதட்டமாக இருக்கு என உண்மையைப் போட்டு உடைத்தார்.

‘அடுத்து யார் சேவ் ஆகப்போறாங்க எனப் பார்க்க வேண்டிய கார்டு வீட்டுக்குள்ள தான் இருக்கு தேடுங்க’ எனச் சொல்ல, வீடு ஃபுல்லா தேடி, போஸ்ட் பாக்ஸில் இருந்த கார்டு சரவணன் கைல கிடைச்சது. அவரே பிரித்துப் பார்த்த போது தன் பேர் தான் வந்துருக்கு எனச் சந்தோஷபட்டார். ‘உங்களைக் காப்பாத்திட்டாங்க’ எனச் சொல்ல அவருக்கு மூஞ்சியே இல்லை.

வனிதா, மது, மீரா கிட்ட வெளியே போகும் முன், ‘வீட்டில் இருக்கிறவங்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறிங்களா?’ எனக் கேட்க, ‘வெளியே வந்து பேசணும் சார்’ என வனிதா சொல்ல, ‘அப்ப இங்க வாங்க பேசலாம்’ என வனிதா கார்ட் எடுத்துக் காண்பித்தவுடனே அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி. ஷெரின், சாக்‌ஷி, ரேஷ்மா ஆகிய மூன்று பேரும் பயங்கர அழுகை. வனிதா கன்ட்ரோலாக இருந்தாங்க.

வெளியே வந்த வனிதாவிடம் பேசினார் கமல். ஆனால் கமல் பேசியது ரொம்பக் குறைவு தான். வனிதா மட்டும் தான் பேசினார். கிட்டத்தட்ட பாத்திமா அவர்கள் வெளியில் வந்த பிறகு தான் அவங்களைப் பற்தி நாம் தெரிந்து கொண்டோம். அதே மாதிரி வனிதா வெளிய வந்து பேசிய போது தான், வனிதாவோட இன்னொரு பக்கம் நமக்குத் தெரியவந்தது. பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு வனிதா கொடுத்த அட்வைஸ் உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. வீட்டுக்குள் இருந்த வரைக்கும் அவங்களின் இந்த பாசிட்டிவ் பக்கம் வெளியில் வரவே இல்லை.

மற்ற யாருக்கும் இல்லாத ஒரு வாய்ப்பு உங்களுக்கு என கமல் சொன்ன போது, ‘ஆஹா! எங்க சீக்ரெட் ரூம்ல உட்கார வக்சுருவாங்களோ!!’ என ஒரு நொடி யோசனை வந்தது. ஆனால் மற்ற ஹவுஸ்மேட்ஸ் வனிதாவைப் பற்றி என்ன பேசறாங்க என மக்களோட உட்காகாந்து கேட்டுவிட்டுப் போகச் சொன்னார். வெளியே போய் எபிசோட் பார்த்தால் அவங்களே தெரிஞ்சுக்குவாங்க, இதுல என்ன வாய்ப்பு எனத் தெரில. எல்லாருமே ரொம்ப பாசிட்டிவா தான் பேசினர். கவின் பாயிண்ட் அவுட் பண்ணிய விஷயங்கள் தான் செம்ம. போன வாரம் வாங்கின கைதட்டல், பயலைப் பயங்கரமாக யோசிக்க வைத்திருக்கு. தெளிவான ஒரு பார்வை. கவின், தர்ஷன், லியா, சாண்டி என இருக்கப் போகிற அந்தக் கடைசி வாரங்கள் எப்படி இருக்கும் என இப்பவே ஆர்வமாக இருக்கு. தர்ஷ்ன், லியா இரண்டு பேரும் புகார்கள் சொன்னார்கள். ரேஷ்மாவுக்கும், வனிதாவுக்கும் இருந்த அந்த பாண்டிங் உண்மையிலேயே நல்ல விஷயம். லைஃப் ஃபுல்லா அவங்க நட்பு தொடரும் என நினைக்கிறேன். வனிதாவோட எக்சிட் ரேஷ்மாவுக்கு தான் மிகப்பெரிய இழப்பு. அந்த நிகழ்வோட கமல் கிளம்பினார்.

வீட்டுக்குள்ளே, மீரா மறுபடியும், ‘அன்னிக்கு காலையில ஆறு மணி இருக்கும்’ எனக் கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். தர்ஷனைப் பேசவே விடாமல், இவர் மட்டும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது எரிச்சல் தான் வந்தது. ‘இனிமே எங்கூட பேசாத’ என தர்ஷன் கிளம்பிட்டான்.

‘இவ்வளவு ஸ்ட்ராங்கான கன்டஸ்டன்ட்டைத் தூக்கிட்டாங்களே!’ என கவின், சரவணன், சாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தான். அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மீரா பேசியது அருவருப்பின் உச்சம். வனிதாவுக்கு பதிலாக மீராவே போயிருக்கலாம் எனத் தோன்ற வைத்துவிட்டார்.

வனிதாவோட பாசிட்டிவ் ஸ்பீச்சுக்கு ஒரு ஷொட்டு;

திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கின்ற மீராவுக்கு ஒரு குட்டு;

உற்சாக கமல் தான் ஹிட்டு.

– மகாதேவன் CM