Shadow

Tag: Captain America: Brave New World

Captain America: Brave New World விமர்சனம்

Captain America: Brave New World விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
இந்தியப் பெருங்கடலில் தோன்றும் செலஸ்டியல் தீவில், அடமான்ட்டியம் கிடைப்பதாகத் தெரிய வர, இந்தியா, ஃபிரான்ஸ், ஜப்பான ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் போட விழைகிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேடியஸ் ராஸ், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மிகக் கவனமாக இருக்கிறார். ஆனால், தேடியஸ் மீது தனிப்பட்ட கோபத்தில் இருக்கும் உயிரணு உயிரியலாளரான (Cellular Biologist) சாம்யூல் ஸ்ட்ரென்ஸ், ‘மிஸ்டர் ப்ளு (Mr. Blue)’ எனும் பாடலைக் கொண்டு பிறரின் மூளையைத் தன்வயப்படுத்தி, அதிபரின் திட்டத்தைத் தவிடுபொடியாக்கி, அதிபரை அசிங்கப்படுத்த நினைக்கிறார். சாம்யூல் ஸ்டெர்ன்ஸால். மீண்டும் போர் ஆரம்பிக்கும் ஒரு சூழல் உருவாகிறது. கேப்டன் அமெரிக்கா அதை எப்படித் தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் (MCU) வழக்கமான ஒரு மேஜிக் இந்தப் படத்தில் இல்லை. ஒரு த்ரில்லராக வென்றிருக்க வேண்...
சென்னை காமிக் கான் – ரெட் ஹல்க் | கேப்டன் அமெரிக்கா

சென்னை காமிக் கான் – ரெட் ஹல்க் | கேப்டன் அமெரிக்கா

அயல் சினிமா
“கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்” படத்திற்காகக் காத்திருக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்தது சென்னை காமிக் கான் நிகழ்ச்சி. அற்புதமாகவும், புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை மேம்படுத்தும்விதமாகவும் அமைக்கப்பட்டிருந்தது மார்வெல் அரங்கு. கேப்டன் அமெரிக்காவுடனும், ரெட் ஹல்க்-உடனும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு சிறப்பரங்கில் அமைக்கப்பட்டிருந்த ரெட் ஹல்க் ஆங்ரி-மீட்டரில், ரசிகர்கள் தங்கள் பலத்தைக் கொண்டு சுத்தியலால் அடித்து விளையாடினர். காட்சிப்படுத்தப்பட்டிருந்த கேப்டன் அமெரிக்காவின் ஷீல்ட், மற்றும் அவரது புதிய இறக்கைகளுடன், ரெட் ஹல்க் போல் உடையணிந்தவர் ரசிகர்களின் சிறப்புக் கவனத்தைப் பெற்றனர். மார்வெலின் புதுப்படத்திற்கான எதிர்பார்ப்பைக் கட்டியம் கூறும் விதமாக அமைந்தது அரங்கில் வரிசையாக நின்றிருந்த ரசிகர்களின் மகிழ்ச்சி. ‘பிரேவ் நியூ ...