
A படம் – விவசாயப் புரட்சியும், கார்ப்பரேட் சூழ்ச்சிகளும்
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில், ராஜகணபதி தயாரிப்பில், கேஸ்ட்லெஸ் சிவா.கோ இயக்கத்தில், ஜோஸ் பிராங்கிளின் இசையில், சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏ படம்” ஆகும். இப்படம் விவசாயப் புரட்சியையும், விவசாய மக்களை கார்ப்பரேட் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது இப்படம்.
இப்படத்தில், கதையின் நாயகனாக ராஜகணபதியும், கதாநாயகியாக மேகா ஸ்ரீயும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குநர் கேஸ்ட்லெஸ் சிவா.கோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இப்படத்தைப் பற்றித் தயாரிப்பாளர் V. ராஜகணபதி, “நாங்கள் திரைப்படத்தை அழகாக எடுத்தோம். ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கு உள்ளானோம். சுமார் ...





