Shadow

Tag: Captain Sherin

பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!!

பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!!

பிக் பாஸ்
கோமாளி பாடலுடன் தொடங்கியது நாள். மொக்கை கதை சொல்வது தான் டாஸ்க்காம். கஸ்தூரி மொக்கை பண்றேன் பேர்வழி என ஷெரினை அழவைக்க, மற்ற எல்லோருமே டென்ஷன் ஆனார்கள். நேற்று, தர்ஷனிடம் சொன்ன மாதிரி கவினைக் கூப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் சேரன். எதற்கு இவருக்கு இந்த வேலை எனத் தோன்றியது. ஏனெனில் இவர் என்ன சொல்வார், அதை அவர்கள் எப்படி எடுத்துப்பார்கள் எனத் தெரியவில்லை. இருக்கின்ற பிரச்சினையில் புதிதாக வேற வரவேண்டுமா என்று யோசனை போனது. ஆனால் சேரன் அந்தச் சூழ்நிலையை ஹேண்டில் செய்த விதம் அற்புதம். நிதானமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, இவர் நமக்கு அட்வைஸ் செய்கிறார் என்ற உணர்வே வராமல், ஒரு உரையாடலாகக் கொண்டு போன விதம் அட்டகாசம். அவரே சொன்ன மாதிரி ரொம்ப நாளா பேச வேண்டுமென நினைத்து, முன் தயாரிப்போடு பேசியது தான். ஆனாலும் கவின் - சாக்‌ஷி பிரச்சினை பெரிதாகும் போது, அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையாக கையாண்டிருக்க...
பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன்

பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன்

பிக் பாஸ்
'தினமும் அடிஷனல் ஷீட் வாங்கி அனாலிஸிஸ் எழுதறேனே, ஒரு நாள் பிரேக் குடுங்க' என நான் கதறினது யாருக்குக் கேட்டதோ இல்லையோ, பிக் பாஸ்க்குக் கேட்டிருக்கும் போல! ஒளிபரப்பினாங்க பாருங்க ஒரு மொக்கை எபிசோட்டை!! 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' பாடலுடன் தொடங்கியது நாள். அது என்ன மாதிரியான சிச்சுவேஷனுக்கு இருக்கற பாட்டு, அதைக் கொண்டு வந்து இங்கே போடவேண்டுமா? ஆனால் இந்த ஸ்கெட்ச் யாருக்கென்று தான் தெரியவில்லை. எல்லோரும் கிண்டர்கார்டன் குழந்தைகளாக மாறி ஒரு ஸ்கூல் டாஸ்க் ஆரம்பித்தது. பஸ்ஸர் அடித்ததிலிருந்து எல்லோரும் கதபாத்திரமாகவே மாறிவிட்டனர். சாண்டி, தர்ஷன், லாஸ், ஷெரின் 4 பேருமே நல்ல பெர்ஃபாமன்ஸ். சேரன் தான் பிரின்சிபல். உடம்பு சரியில்லையோ என்னவோ, ரொம்ப சோர்வாக இருந்தார். மேலும், இன்று என்ன ஏழரை நடக்கப் போகுதோ என்கிற பீதி அவர் கண்களில் தெரிந்தது. அவருக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை.&nb...