Shadow

பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!!

bigg-boss-3-day-60

கோமாளி பாடலுடன் தொடங்கியது நாள்.

மொக்கை கதை சொல்வது தான் டாஸ்க்காம். கஸ்தூரி மொக்கை பண்றேன் பேர்வழி என ஷெரினை அழவைக்க, மற்ற எல்லோருமே டென்ஷன் ஆனார்கள்.

நேற்று, தர்ஷனிடம் சொன்ன மாதிரி கவினைக் கூப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் சேரன். எதற்கு இவருக்கு இந்த வேலை எனத் தோன்றியது. ஏனெனில் இவர் என்ன சொல்வார், அதை அவர்கள் எப்படி எடுத்துப்பார்கள் எனத் தெரியவில்லை. இருக்கின்ற பிரச்சினையில் புதிதாக வேற வரவேண்டுமா என்று யோசனை போனது. ஆனால் சேரன் அந்தச் சூழ்நிலையை ஹேண்டில் செய்த விதம் அற்புதம்.

நிதானமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, இவர் நமக்கு அட்வைஸ் செய்கிறார் என்ற உணர்வே வராமல், ஒரு உரையாடலாகக் கொண்டு போன விதம் அட்டகாசம். அவரே சொன்ன மாதிரி ரொம்ப நாளா பேச வேண்டுமென நினைத்து, முன் தயாரிப்போடு பேசியது தான். ஆனாலும் கவின் – சாக்‌ஷி பிரச்சினை பெரிதாகும் போது, அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையாக கையாண்டிருக்கலாம். ஏனெனில் எல்லோரும் என்ன நடக்குது என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருந்த போது, சேரனும் அப்படியே தான் நடந்துகொண்டார். சில சமயங்களில் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் போது, அடுத்து வரக்கூடிய சூழ்நிலைகளை நம்மால் சிறப்பாகக் கையாள முடியும். இங்கேயும் அது தான் நடந்து கொண்டிருக்கு. கவின், லாஸ் இரண்டு பேருக்குமே சேரன் பேசினதில், வருத்தமோ, புகாரோ இல்லை.

சேரன் சொன்னதைக் கவினும் சரியான விதத்தில் புரிந்து கொண்டதும் சிறப்பு. ‘லாஸ் ஒரு குழந்தை மாதிரி. நான் நல்லா பார்த்துப்பேன்’ என அவன் மனதிலிருந்து சொல்லிருந்தால், மிக்க மகிழ்ச்சி.

பிறகு சேரனும், லாஸும் பேசும் போது, சேரன் கவிமிடம் சொன்ன விஷயங்களை லாஸ் பேசி ஆச்சரியப்படுத்தினார். ‘நான் ஒன்னும் குழந்தை இல்ல. ஐ நோ வாட் ஐயாம் டூயிங்’ எனச் சொல்கின்ற மாதிரி இருந்தது. கவின்-லாஸ் இரண்டு பேரும் தெளிவாக இருக்கும் போது, நமக்கு என்ன பிரச்சினை?

இன்னொரு கோணத்தில் யோசித்தால், இந்த வாரம் கவின் – லாஸ் இரண்டு பேரிடமும் அவங்களின் உறவைப் பற்றி கமல் பேசக்கூடிய வாய்ப்பு இருந்தது. இதை யூகித்துக் கூட சேரன் இதைப் பேசியிருக்கலாம். இப்பொழுது அதைப் பற்றிப் பேச வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தன் மகளுக்காக இதை சேரன் செய்திருக்கலாம். எது எப்படியிருந்தாலும் ஆல் இஸ் வெல்.

இந்த வார பெஸ்ட் பெர்ஃபாமரைத் தேர்ந்தெடுக்கும் நேரம். இந்தத் தடவை எல்லோரும் அவங்க சாய்ஸைச் சொன்னார்கள். கவின், சேரன், லாஸ் மூன்று பேர் பெயரும் தான் மெஜாரிட்டியில் வந்தது. டாஸ்க்கில் பெஸ்ட் பெர்ஃபாமரில் கவின், லாஸ் இரண்டுபேரும் செலக்ட் ஆனார்கள். வாரம் முழுவதும் சிறந்து விளங்கும் நபருக்கு, சேரன் பேரை எல்லோருமே சொன்னார்கள். அதை ஆட்சேபித்தது வனிதா தான்.

முதல் கேட்டகிரிக்குத் தன்னையே நாமினெட் பண்ணினவர், இந்த கேட்டகிரிக்கு, நான் ஏன் வரக்கூடாது என ஒரே விவாதம். டாஸ்கிக் இருந்து விலகிப் போனது வனிதா தான். ஆனால் அந்த இடத்திலேயே, நாம் இதை ஒரு கன்டென்ட்டாக விளையாடலாம் எனச் சொல்லி, அந்த சண்டையும் போட்டிருக்கிறார். இப்ப என்னவென்றால் கஸ்தூரி மேல் நான் கொடுத்த புகாரை உடனடியாக விசாரிக்கவில்லை. ஆகவே, சேரன் தப்பு செய்திருக்கிறார் என விவாதம். திரும்பத் திரும்ப அதையே சொன்னதற்கான காரணம், வொர்ஸ்ட் பெர்ஃபாமர்ஸ் பட்டியலில் தனது பெயர் தான் முதலில் இருக்கும் என வனிதாவுக்கு தெரிந்துள்ளாது. எப்படியும் நம்மைச் சிறைக்கு அனுப்பிடுவாங்க என முடிவு செய்து இப்படி நடந்துகொண்டார். அதிலொரு அழகு என்னவென்றால், தான் டாஸ்க்கை விட்டு வெளியே போன விஷயத்தையே எல்லோரும் மறந்து போகுமளவுக்கு, சேரன் மேல் கம்ப்ளெயின்ட் செய்தது தான்.

ஆனால் அங்கே தான் தலைவி ஷெரினோட மாஸ்டர் பிளான் வேலை செய்தது. பெஸ்ட் பெர்ஃபாமர் நாமினேஷன் பற்றி பாய்ஸ் டீம் கூட டிஸ்கஸ் பண்ணியிருக்கிறார். இதுவரைக்கும் கேப்டன் பதவிக்கு வராதவங்களுக்குக் கொடுக்கலாமென ஒரு மனதாக முடிவு எடுத்திருக்கிறார். அதனால் தான் கவின், லாஸ், சேரன் ஆகிய மூன்று பேரும் செலக்ட் ஆனார்கள். அதோடு முடியவில்லை. வொர்ஸ்ட் பெர்ஃபாமர் பெயருக்கு வனிதா, கஸ்தூரி பேர் தான் முடிவாகியிருக்கு.

இப்போதைக்கு வனிதா மட்டும் தான் சமையல். வேற யாருக்கும் தெரியாது. ஆக, வனிதாவைச் சிறைக்கு அனுப்பினால், சோறு கிடையாது. அதைப் பற்றியும் பிக்பாஸிடம் பேசி, இந்த வார வொர்ஸ்ட் பெர்ஃபாமன்ஸ் தண்டனை வேண்டாமென கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட பிக்பாஸ், வொர்ஸ்ட் பெர்ஃபாமரைச் சொல்ல வேண்டியது இல்லை எனச் சொல்லிவிட்டார். தட்ஸ் தி பவர் ஆஃப் கேப்டன் ஷெரின்டா!!

அடுத்த டாஸ்க்காக ஒவ்வொருத்தரைப் பற்றியும் பாசிட்டிவான விஷயங்களைப் பற்றிச் சொல்லவேண்டும். ரொம்ப நன்றாகவும் இருந்தது.

இவங்களிடமுள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், கன்டென்ட் கொடுத்தால் ஒரே நேரத்தில் மொத்தமாகக் கொடுத்து விடுகின்றனர். இல்லாவிட்டால் ஒரே மொக்கையாகப் போய் விடுகிறது.

எல்லோரும் ஆர்வத்தோடு, அடுத்தவர்களைப் பற்ரீ நல்லவிதமாகச் சொன்னார்கள். அப்பவும், சேரன் சாண்டி பற்றிச் சொன்னதும், சாண்டி சேரன் பற்றிச் சொன்னதும் கட் பண்ணிவிட்டனர். இரண்டு பேருக்கும் நடுவில் ஒரு பனிப்போர் இருக்கு என நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த ஃபயர் அப்படியே இருக்க வேண்டுமென நினைக்கின்றனர் போல. ஒருவேளை அவங்க பேசினது டெலிகாஸ்ட் பண்ணிருந்தால், அந்த ஃபயர் கொஞ்சம் கம்மியாகி இருக்கும்.

கடைசியில் லாஸிடம் பேசிக் கொண்டிருந்தான் தர்ஷன். சேரனைப் பற்றி மிக உயர்வாகச் சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் ஆட்கள் குறையக் குறைய தான் நேசித்தவர்களையே நாமினேட் செய்ய வேண்டி வரும். கிட்டத்தட்ட ஹவுஸ்மேட்ஸ் எல்லோருக்கும் நடுவில் ஒரு க்ளோஸ் பாண்டிங் இருக்கு. அடுத்த வரும் வாரங்களில் பிசிக்கல் டாஸ்க் வருமென்றாலும், தான் ரொம்ப விரும்புகின்ற ஒரு நபரை எதிர்த்து நிற்க வேண்டியிருக்கும். அப்பொழுது மென்ட்டல் டார்ச்சர் அதிகமாக இருக்கும். ‘கேமா இல்ல ப்ரெண்ட்ஷிப்பா?’ என முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலை வரும். இன்று நடந்த இந்த பாசிட்டிவ் எண்ணங்கள் டாஸ்க், அவங்க பாண்டிங்கை இன்னும் நெருக்கமாக்கும். அதற்கப்புறம் அந்த இரண்டு பேரையும் எதிரெதிராக நிற்க வைத்தால் என்னாகும்? அதுதான் அடுத்த வாரம் நடக்கப் போகின்றது.

– மகாதேவன் CM