Shadow

Tag: Caste in Tamil Nadu

வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

கட்டுரை, சமூகம், சினிமா
கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்தப் பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாகக் கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி? ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத் தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்துப் படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது. ~~ கேள்வி 1:...