“ஆதலால் காதல் செய்வீர்!” அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி மந்திராலோசனை
உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் தினங்களில் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில், நாட்களில், மணித்திலாயங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல். ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் புதுமலராய் பூத்தவண்ணம் இருக்கிறது.
இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்களும் இளைஞர்களும் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் தமிழக அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்குப் புதிய அடையாளம் ஒன்றினைக் கொடுத்துள்ளார். தன் பேரனைத் தோளில் சுமந்து, "ஹாப்பி வேலண்டைன்ஸ் டே" என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்துப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இந்தப் படம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், "பிப்ரவரி 14 என்பதைப் பலரும் காதலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அப்படின்னு நினைச...