Shadow

Tag: Despicable Me 3

டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
2010இல் தொடங்கியது ‘டெஸ்பிக்கபிள் மீ’ தொடர். அதில் வரும் மினியன்ஸ் எனும் திரைப்பாத்திரங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த பரவலான வரவேற்பின் காரணமாக வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. சமீபத்தில், மினியன்ஸ் போன்று மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்ற திரைப்பாத்திரம் வேறில்லை என்றே சொல்லவேண்டும். சமூக வலைத்தளங்களில் எமோட்டிகான்களாகப் பயன்படுத்தப்படும் மினியன்ஸ், மக்களின் எல்லா விதமான உணர்ச்சிகளையும் தங்கள் சின்னஞ்சிறு மஞ்சள் உருவங்களின் மூலம் பிரதிபலிக்கின்றன. மக்களுக்கு மினியன்ஸிடமுள்ள மோகத்தினை மனதில் கொண்டே, யுனிவர்சல் பிக்சர்ஸ் முதல் முறையாக டெஸ்பிக்கபிள் மீ தொடரில் வந்திருக்கும் மூன்றாம் பாகத்தைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். முந்தைய பாகங்களில், வெறுக்கத்தக்க வில்லனாக இருந்து, மூன்று அநாதை சிறுமிகளுக்கு நல்ல தகப்பனாக மாறி, லூசி வைல்டின் கரம் பிடித்து ஏ.வி.எல்.(Anti-Vill...
மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3

மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஃப்ரான்ஸில் உள்ள ‘மெக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன் ஸ்டூடியோவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட படம்தான், ‘டெஸ்பிக்கபிள் மீ’ திரைப்படம். 69 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அப்படம், 543.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துக் குவித்தது. அதன் தொடர் படமாக 2013 இல் வெளிவந்த டெஸ்பிக்கபிள் மீ 2 அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டு 970.8 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்தது. அவ்விரு படங்களையும் பியரீ காஃபின் மற்றும் க்ரிஸ் ரெனாட் ஆகிய இருவரும் இயக்கியிருந்தனர். மூன்றாவது தொடர் சங்கிலித் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள மகத்தானதொரு முப்பரிமாணத் திரைக்காவியம் தான், ‘டெஸ்பிக்கபிள் மீ 3’. இடையே, 2015இல், ‘டெஸ்பிக்கபிள் மீ’ படத்தொடர்களின் முன்னோடியாக 74 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட படம், ‘மினியன்ஸ்’. பியரீ காஃபினோடு...