Shadow

Tag: Diamond Babu

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கண் பார்வைக் குறைபாடுள்ள நாயகனுக்கு, தன் குடும்ப உறவைக் கொன்றது யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொலையாளி யார், கொலையாளியை எப்படிக் கண்டுபிடித்தார், குடும்ப உறவுக்கும் கொலையாளிக்கும் என்ன பகை போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் கதை. படத்தின் ஆரம்பக் காட்சியில் ஆட்டோவில் பயணம் செய்யும் விக்ரம் பிரபு நடுரோட்டில் பைக் பஞ்சர் ஆனதால் தவித்துக் கொண்டிருக்கும் ஓர் இளம் கணவன் மனைவிக்கு லிஃப்ட் கொடுத்து உதவுகிறார். ஆட்டோவில் ஏறும் அந்த இளம்பெண்ணோ விக்ரம் பிரபுவை மயக்கமடையச் செய்ய முயற்சி செய்கிறார். ‘ஏன்?’ என்கின்ற விறுவிறுப்போடு படம் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் திரைக்கதையைச் சுவாரசியமாக்குகின்றன. ஒரு கட்டத்தில் அவர்கள் குறி வைப்பது விக்ரம் பிரபுவையா இல்லை அவரது வீட்டில் உள்ளவர்களையா என்கின்ற குழப்பம் வரும் போ...
ஜாஸ்பர் விமர்சனம்

ஜாஸ்பர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழில் வந்திருக்கும் முதல் ஹிட்மேன் படமென பட நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளனர். அடிதடி என வாழும் ஜாஸ்பர், போலீஸ்க்கு உதவும் ஒரு ஹிட்மேனாக உருமாறி வேட்டையாடுகிறான். அவன் குடும்பத்தை இழந்ததும் அனைத்தையுன் விட்டுத் தலைமறைவாகி விடுகிறான். ஜாஸ்பர் கிழப்பருவம் எய்தி முதுமையை அடையும் தருவாயில் உள்ள பொழுது, அவனது பக்கத்து வீட்டிலுள்ள இளைஞன் கடத்தப்படுகிறான். அந்த இளைஞனை மீட்க மீண்டும் ஹிட்மேனாக மாறுகிறான் ஜாஸ்பர். குடித்துக் குடித்து தன்னைச் சீரழித்துக் கொள்ளும் ஜாஸ்பரால், பக்கத்து வீட்டு இளைஞனைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. ஹிட்மேனின் அறிமுகம் ஒரு தோப்பில் நிகழ்கிறது. படத்தின் கதைக்களம் மிகவும் பெரியது. ஆனால், படத்தின் பட்ஜெட் காரணமாக எல்லாம் மிக எளிமையாக நிகழ்கின்றன. மிஸ்டர் ஜே எனும் ஹிட்மேன்க்கு அதிசய சக்திகள் உள்ளதாக வதந்தியும் பயமும் மக்களிடையே எழுகிறது. அத...
ஜாஸ்பர் – தமிழில் ஒரு ஹிட்மேன்

ஜாஸ்பர் – தமிழில் ஒரு ஹிட்மேன்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால், ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் படங்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவு. அதை பூர்த்தி செய்யும் விதமாக விஸ்வரூபி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து, அறிமுக இயக்குநர் யுவராஜ்.D இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ளது ஜாஸ்பர் திரைப்படம். முழுக்க முழுக்க ஆக்ஷன், சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா தத்தா மற்றும் விவேக்கின் மென்மையான காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசையமைத்துள்ளார், பாடகர்கள் பிரதீப் குமாரும், சைந்தவியும் தங்கள் இனிமையான குரலில் பாட, அற்புதமான பாடல் காட்சிகளும் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, சி.எம். பாலா, ராஜ் கலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, கோட்டையம் ...
விக்ரம் விமர்சனம்

விக்ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைதியின் தொடர்ச்சியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படமாக வந்துள்ளது விக்ரம். மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போல் ஒரு மேல்தோற்றம் தெரிந்தாலும், போதை வஸ்துகளற்ற சமூகத்திற்கான போராடும் வேட்டையாளராக விக்ரம் காட்டும் ஆக்ரோஷம் தான் படத்தின் கதை. மல்டிஸ்டார் படத்தை எப்படி ஹேண்டில் செய்யவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகப் படம் திகழ்கிறது. ஒற்றை நாயகனின் சூப்பர் ஹீரோயிச பாணியில் சிக்குண்ட தமிழ்த் திரையுலகின் நார்சிஸ சூழலில் இருந்து வெளிவந்து, படத்தின் முதற்பாதி நாயகனாகப் பஹத் பாசிலை மிளிர விட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் வில்லன் யார், நாயகன் யார் என பஹத் பாசிலின் இன்வெஸ்டிகேஷனில் முதற்பாதி பரபரவென ஓடுகிறது. இந்த யுக்தி, சந்தனமாக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கும், பின்பாதியில் விக்ரமாகக் கர்ஜிக்கும் கமல் ஹாசனிற்கும் ஆழமான அடித்தளம் அமைத்துள்ளார். அதே போல் படம...