Shadow

Tag: Director Joe Wright

டார்கெஸ்ட் ஹவர் விமர்சனம்

டார்கெஸ்ட் ஹவர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'டார்கெஸ்ட் ஹவர் (Darkest Hour)' என்பது இரண்டாம் உலகப் போர் உருவாக்கிய நெருக்கடியைக் குறித்துச் சொல்ல வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய பதம். நெவில் சேம்பர்லைன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக அறிவிக்கப்படுகிறார். ஏன் சர்ச்சில் என்று விருப்பமின்றி அரசர் ஜார்ஜ் VI வினவ, ஹிட்லர் பற்றிய அவரது யூகம் சரியாக இருந்ததென அவருக்குச் சொல்லப்படுகிறது. டன்கிர்க்கில் சுமார் 3 லட்சம் பிரிட்டிஷ் வீரர்கள் ஜெர்மனியரால் சூழப்பட, அவரது கட்சி உறுப்பினரோ ஹிட்லருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்கிறார். அத்தகைய குழப்பமான இருண்ட காலகட்டத்தைச் சர்ச்சில் எப்படி அணுகினார் என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஃப்ரேமிலேயே அசரடிக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரூனோ டெல்பொன்னெல் (Bruno Delbonnel). அமெரிக்க ஜனாதிபதி ஃப்...