ஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்
ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம்.
தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழகப் பிரபலங்கள் இணைகிறார்கள். நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் தந்துள்ளார். ஒரு பாடலையும் பாடியுள்ளார். தமிழின் பிரபல பாடலாசிரியாக விளங்கும் தளபதி விஜயின் சர்கார், பிகில் படங்களுக்கு பாடல் தந்த பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்குத் தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். படத்தின் மிகப்பிரபல கதாபாத்திரமான ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார். குணச்சித்திர நடிப்பில் கலக்கும் திவ்யதர்ஷிணி (விஜ...