
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்
இந்தியாவின் மீது தீவிர காதல் கொண்ட பெருங்கோபக்காரனான சூர்யா இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான். அவன் விருப்பப்பட்ட எல்லைக் காவல் வேலை, சூர்யாவிற்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
'கோபம் வந்துச்சு. அடிச்சேன்' என்ற சூர்யாவின் அறிமுக அத்தியாயமே தூள். 'இவன் தான் சூர்யா' எனப் பார்வையாளர்களை முழுப் படத்திற்கும் தயாராக்கிவிடுகிறார் இயக்குநர் வம்சி. முறுக்கேறிய உடலுடம் ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜுன், சூர்யா பாத்திரத்திற்குக் கனகச்சிதமாய்ப் பொருந்துகிறார். கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்ஷ்மன் என நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்களும் சூர்யா பாத்திரத்திற்கு உரம் சேர்த்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். அதகளமான சண்டையில் தொடங்கும் படம், அதே போலொரு சண்டையினோடு இடைவேளையில் முடிகிறது. அதன் பின், அதிரடியான சண்டை ப்ரீ-க்ளைமேக்ஸில் தான் வருகிறது. ஆம், படத்தின் க்ளைமேக்ஸில் சண்டை இல்லை. மா...