Shadow

Tag: Fortune Four Cinemas

“விஸ்வநாத் & சன்ஸ்: ஹாட்ரிக் வெற்றி” – ஜி.வி | The ONE Suriya

“விஸ்வநாத் & சன்ஸ்: ஹாட்ரிக் வெற்றி” – ஜி.வி | The ONE Suriya

சினிமா, திரைச் செய்தி
சித்தாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் 'சூர்யா' நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்தப் படக்குழுவினர், நன்றி நவில்தல் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், ''சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் 'கஜினி' படத்திற்காக நேர்காணல் செய்தேன். நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தா...
விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விஸ்வநாத் எனும் தொழிலதிபர், சான் பிரான்சிஸ்கோ சென்று வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்கிறார். திடீரென அக்குழந்தைக்கு மிக அரிதான நோய் ஒன்று வர, அதற்குத் தீர்வாகத் தாயின் எலும்பு மஜ்ஜை வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. விஸ்வநாத், வாடகைத்தாயான மதனகாமேஸ்வரி ஜோதிலிங்கம் எனும் மேடி J-வைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்து வருகிறார். மேடியின் வரவால், விஸ்வநாத் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதே படத்தின் கதை. கச்சிதமான கதாபாத்திரத் தேர்வுகள் படத்தின் பெரும்பலம். சூர்யா, ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, ரவீனா டாண்டன், பவானிஸ்ரீ ஆகியோர் தங்கள் ஏற்றப் பாத்திரத்திற்கு மிக நிறைவான பங்களிப்பை அளித்துள்ளனர். அந்த மாளிகையின் உட்புறத்தோற்றமான ஹால் மட்டும் ஓர் அந்நிய உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் நடிகர்கள் அதைத் தங்களது நடிப்பால் மறக்கடித்து விடுகின்றனர். இயல்பாகவே ஓர் அப்பாவித்தனம் அப்பி...
விஸ்வநாத் & சன்ஸ் – ட்ரெய்லர்

விஸ்வநாத் & சன்ஸ் – ட்ரெய்லர்

Trailer, காணொளிகள், சினிமா
சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.  இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூ ர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமையவுள்ளது. நாற்பது வயதைக் கடந்தும் தனது கனவுகளைத் துரத்தும் சர்வதேசத் துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல், கனிவு, நகைச்சுவை, உணர்ச்சிகள் ஆகியவற்றை சூர்யா மிகச் சிறப்பாகக் கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாகக் கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். திரையில் மமிதா பைஜு தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்...
விஸ்வநாத் & சன்ஸ் – தமிழில் ஓர் அலா வைகுந்தபுரம்லோ

விஸ்வநாத் & சன்ஸ் – தமிழில் ஓர் அலா வைகுந்தபுரம்லோ

சினிமா, திரைச் செய்தி
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் கலையரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் கோலாகலமாக திருவிழா போல் சிறப்பாக நடைபெற்றது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ''மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த வாத்தி படத்திற்குப் பிறகு, மீண்டும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி, சாய் சௌஜன்யாக்கு நன்றி. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் மிகவும் ஸ்பெஷலானது. சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்திற்குப் பிறகு நானும் அவரும் இணைந்து பணி...
VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர்

VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் #VD12 படத்திற்கு 'கிங்டம்' என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது.  டீசரில், சூர்யா தமிழுக்கும், ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான கதையாக இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைக்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்குநராக அவினாஷ் கொல்லா பணியாற்றுகிறார். ஜோமோன் டி.ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன் இருவரும் ஒளிப்பதிவு செய்கின்றனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்...
VD12 – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம்

VD12 – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
விஜய் தேவரகொண்டா,  கௌதம் தின்னனுரி, சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் 'VD 12' திரைப்படம், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. 'ரௌடி' என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா  இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் 'VD 12 'எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது இத்திரைப்படம். இந்தப் படத்திற்கு தற்போது 'VD 12' எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு இதற்கு முன் எப்போதும் இல்லாத புதுமையான அனுபவத்தை வழங்குவதற்காகத் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடனும், ஆர்வத்துடனும் அயராது உழைத்து வருகின்றனர். தற்போது ...