Shadow

Tag: Gabba victory

சென்றார்கள்! வென்றார்கள்! வந்தார்கள்!

சென்றார்கள்! வென்றார்கள்! வந்தார்கள்!

சமூகம்
ஏறக்குறைய ஆசஷ் தொடருக்கு இணையாகப் புகழ் பெற்ற தொடர்தான் பார்டர் கவாஸ்கர் டிராஃபியும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே இருக்கும் மிகப் பெரிய வரலாறோ, சில வலிகளோ, கோபங்களோ இல்லாவிடினும், 90களின் மத்தியில் இருந்து இந்திய அணி பெற்று வந்த எழுச்சியும், மிக வலுவான அணியாக இருந்த ஆஸிக்கு, 2000 க்குப் பின்பு நெருக்கடியைக் கொடுக்கும் முக்கிய அணியாக இந்தியா மாறியதும், இந்தக் கோப்பைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வைத்தது. தவிர, அதே சமயத்தில்தான் இந்தியாவுடனான போட்டியில் எப்போதும் சுவாரசியத்தைக் கொடுக்கும் பாகிஸ்தான் அணியின் திறமையும் மங்க ஆரம்பித்ததால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியாக ஆஸி உடனான போட்டிகள் வந்து நின்றது. சாம்பியனை வீழ்த்தினால், எப்போதும் கூடுதல் சந்தோஷம் அல்லவா? இந்த முறை, பார்டர் காவஸ்கர் தொடருக்கான டெஸ்ட் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்பு, இரு அணிகளும் 3 வெற்றிகளைப...
கப்பா வெற்றி – இளமை, த்ரில், வரலாறு

கப்பா வெற்றி – இளமை, த்ரில், வரலாறு

சமூகம்
இந்திய அணி, கப்பாவில் அடைந்த வெற்றியை வெறும் புள்ளிவிவரங்களால் சொல்லி விட முடியாது. உணர்வுகளால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். 325 ரன்களை ஒரு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், அதுவும் இலக்கை சேஸ் செய்யும் போட்டியில், கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், நாதன் லயன் என்ற மிகச் சிறந்த கூட்டணிக்கு எதிராக ஆடி ஜெயிக்கும் போது கொடுக்கும் உணர்வுகளை வெறும் வார்த்தைகள் சொல்லிவிடுமா என்ன? நால்வரும் ஐசிசி தர வரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருக்கிறார்கள். அதில் பாட் கம்மின்சும், ஹேசல்வுட்டும், முதல் மற்றும் 4ஆம் இடங்களில் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் முண்ணனி பந்து வீச்சாளர்களோ காயம் காரணமாக வெளியே இருக்கிறார்கள். ஆஸி பந்து வீச்சாளர்களின் ஒட்டுமொத்த டெஸ்ட் அனுபவம் 250க்கும் மேல் என்றால், இந்திய பந்து வீச்சாளர்களின் அனுபவமே வெறும் 7 போட்டிகள்தான். ஆடிய வீரர்களில் ஒப்பீட்டளவில் அனுபவம் வாய்ந்த வ...
“இது போலோரு வெற்றியுண்டோ!” – கலக்கிய இந்திய அணி

“இது போலோரு வெற்றியுண்டோ!” – கலக்கிய இந்திய அணி

கட்டுரை, சமூகம்
இந்திய அணியின் மிகச் சிறந்த வெற்றி ஏதுவெனக் கேட்டால் தயங்காமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாலாவது போட்டியின் வெற்றியைத் தாராளமாகச் சுட்டிக்காட்டலாம். இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், பெரும்பான்மையான முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுநர்கள், Arm Chair experts எனப்படும் சமூக வலைத்தள விஞ்ஞானிகளும் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும், அதுவும் சுலபமாக மிகப் பெரிய வித்தியாசத்தில் வெல்லும் என்று கணித்திருந்தனர். அதற்கேற்ப முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் நன்றாக விளையாடி முன்னிலையில் இருந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி பரிதாபமாகத் தோற்றது. தன் குழந்தை பிறப்பிற்கான விடுமுறையில் கோலி இந்தியா திரும்பி விட, இரண்டாவது டெஸ்டில் ரஹானே தலைமையில் களம் கண்ட இந்தியா அணி அபார வெற்றியைப் பெற்று தொடரைச் சமன் செய்தது. மூணாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா பெரும்...