Shadow

Tag: Geetha kailasam

நீல நிறச் சூரியன் விமர்சனம்

நீல நிறச் சூரியன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், தகிப்பையும் தவிப்பையும் ஒரு கணமேனும் மனிதராகப்பட்ட ஒருவரும் அனுபவித்திருப்பார்கள். செய்யாத குற்றத்துக்குத் தண்டனை ஏற்கும் பொழுது, தனது உழைப்பைப் பிறர் திருடி ஆதாயம் அடையும் பொழுது, தகுதியற்றவர் முன் கைகட்டி நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் பொழுது என தகிப்பும் தவிப்பும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி ஏற்பட்டிருக்கும். அதில், உடலால் ஒரு பாலினமாகவும், மனதால் வேறு பாலினமாகவும் உணரும் ஒருவரது தகிப்பும் தவிப்பும் அடங்கும். ஒப்பீட்டளவில் இது மிகக் கொடுமையானது. அக்கொடுமை ஆண்டுக்கணக்காக, சில சமயம் மரணம் வரையிலுமே கூட நீளும். தகிப்பைத் தணிக்க நீரில் இறங்கினால், மீண்டும் நீரில் இருந்து எழ முடியாதபடிக்குத் தலையைப் பிடித்து நீரிலேயே அமிழ்த்துவிடப் பார்க்கும் இந்தச் சமூகம், சமூக ஏளனம், குடும்ப மானம், உறவுகள், இத்யாதிகள். நாகரீக பாவனைக்குக் கீழ், இந்தச் சமூகம் ஒளித்து வைத்த...
DeAr விமர்சனம்

DeAr விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குட் நைட் திரைப்படத்தில் குறட்டை விடும் பிரச்சனையால் நாயகன் பாதிக்கப்படுவான். DeAr இல் அதே குறட்டை விடும் பிரச்சனையால் நாயகி பாதிக்கப்படுகிறாள். பெற்றோரின் அறிவுறத்தலின்படி அந்தப் பிரச்சனை இருப்பதை மறைத்துத் திருமணம் செய்கிறாள். முதலிரவு அன்றே அவளின் முதன்மையான பிரச்சனை தெரியவர, அதைத் தொடர்ந்து எழும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் தான் இந்த DeAr திரைப்படம். கதையின் பிரச்சனை என்ன என்பது தெரியும் போதே, அதன் முடிவும் இதுவாகத் தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட தூரத்தை சுவாரசியமான காட்சிகளாலும், கை தேர்ந்த நடிகர்களின் நடிப்பினாலும் இட்டு நிரப்பி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். திரைப்படத்தின் ஆகச் சிறந்த பலமே அதில் நடித்திருக்கும் கை தேர்ந்த நடிகர் நடிகைகள் பட்டாளம் தான். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷில் துவங்கி, காளி வெங்கட், இளவ...