Shadow

Tag: Gladiator 2 movie

கிளாடியேட்டர் II விமர்சனம்

கிளாடியேட்டர் II விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கிபி 200. கிளாடியேட்டர் படத்தின் நாயகனான மேக்ஸிமஸ் டெசிமஸ் மெரிடியஸ் இறந்து 16 வருடங்களுக்குப் பின், இப்படத்தின் கதை தொடங்குகிறது. அகேஷியஸின் தலைமையிலான ரோமப்படைகளால் முற்றுகைக்கு உள்ளாகும், நுமிடியாவின் கடைசி நகரத்தை, அதன் தலைவனான ஜுகர்தாவுடன் இணைந்து பாதுக்காகப் ஹேனோவும், அவரது மனைவி அரிஷத்தும் போரிடுகின்றனர். போரில் அரிஷத் கொல்லப்பட, ஜுகர்தாவும் ஹேனோவும் அடிமைகளாக ஆஸ்டியாக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அகேஷியஸைக் கொல்லத் துடிக்கும் ஹேனோவின் ஆத்திரத்தைக் கண்டுகொள்ளும் மேக்ரினஸ், ஹேனோவை கிளாடியேட்டராகக் களத்தில் இறக்குகிறார். மேக்ஸிமஸ் உதிர்க்கும் கவிதையைச் சொல்லி, அவரைப் போலவே களத்தில் வாளைச் சொருகி, மண்ணை எடுத்து கைகளில் தடவிக் கொள்ளும் ஹேனோ தான், தனக்கும் மேக்ஸிமஸ்க்கும் பிறந்த மகன் லூசியஸ் வெரஸ் அரிலியஸ் என லூசிலாவிற்குத் தெரிந்து விடுகிறது. அதன் பின் ஏற்படும், தாய் – மகன் பாசப்ப...