“குட் நைட்” – ஜூலை 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்
இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான குட் நைட் திரைப்படத்தை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக ஜூலை 3 முதல் வழங்குகிறது.
இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்தில், மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில், அருமையான நகைச்சுவை டிராமாவான குட் நைட் திரைப்படம் வெளியானது. குறட்டை ஒலியும், அது சமூகத்தில் உண்டாக்கும் அதிர்வுகளையும் அதன் மீதான கருத்துக்களையும் அலசுகிறது இந்தப் படம். ஒருவனின் வாழ்க்கையையும் அதனால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது.
குறட்டை விடுவதால், அவதிப்படும் மணிகண்டனுக்கும், அவரது மனைவியாக நடித்துள்ள மீதாவிற்கும் உள்ள உறவையும், அவர்கள் வாழ்வில் குறட்டை ஏற்படுத்தும் தாக்கங்களையும் நகைச்சுவையுடன் அருமையான திரைக்கதையில் தந்துள்ளது இப்படம்.
மோகனின் குறட்டை சத்தம் அனுவை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்கிறது. இறு...