32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“குட் நைட்” – ஜூலை 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

Dinesh R சேலம் Published: 01/07/2023 1 நிமிட வாசிப்பு OTT
எழுத்து அளவு:

இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான குட் நைட் திரைப்படத்தை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக ஜூலை 3 முதல் வழங்குகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்தில், மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில், அருமையான நகைச்சுவை டிராமாவான குட் நைட் திரைப்படம் வெளியானது. குறட்டை ஒலியும், அது சமூகத்தில் உண்டாக்கும் அதிர்வுகளையும் அதன் மீதான கருத்துக்களையும் அலசுகிறது இந்தப் படம். ஒருவனின் வாழ்க்கையையும் அதனால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது.

குறட்டை விடுவதால், அவதிப்படும் மணிகண்டனுக்கும், அவரது மனைவியாக நடித்துள்ள மீதாவிற்கும் உள்ள உறவையும், அவர்கள் வாழ்வில் குறட்டை ஏற்படுத்தும் தாக்கங்களையும் நகைச்சுவையுடன் அருமையான திரைக்கதையில் தந்துள்ளது இப்படம்.

மோகனின் குறட்டை சத்தம் அனுவை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்கிறது. இறுதியில், தூக்கமின்மையால் அனுவின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அதனால் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். மனைவியின் உடல்நிலையில் அக்கறை கொண்டு மோகன் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

நசரத் பாசிலியன், மகேஷ் ராஜ் பாசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டனின் அட்டகாசமான இசையும், ஜெயந்த் சேது மாதவனின் கண்கவர் ஒளிப்பதிவும் பலமாக அமைந்துள்ளன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.