Shadow

Tag: Harvard Tamil Chair

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்

சமூகம்
உலகப்புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைய இருக்கிறது. தமிழ் தொடர்பான உருப்படியான வேலை என்றால் அது இதுதான். தமிழ் இருக்கை என்றால் என்ன? எதற்காக அது அமைக்கப்பட வேண்டும்? உலகெங்கும் சுமார் 10 கோடித் தமிழர்கள் உள்ளோம். உலகின் பெரிய இருபது மொழிகளில் தமிழும் அடக்கம். உலகின் ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. எனினும் உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும். நமது பண்டைத்தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும் போது இந்தப் போதாமைக...
ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!

கட்டுரை, சமூகம்
ஹார்வார்ட் தமிழ் இருக்கையை வாழ்த்தி கவிஞர் தாமரை எனக்கு ஒரு கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர் எழுதிய மடல் இதுதான். அன்புள்ள அ.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு, வணக்கம். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் 'தமிழ் இருக்கை' பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். முதன்முதலாக இது பற்றித் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம், ' தமிழர்கள் நாம் எப்போது பார்த்தாலும் தமிழ்ப் பெருமை பேசித் திரிகிறோம், ஆனால் இப்போதுதான் ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி யோசிக்கிறோம், ஏன் இந்த எண்ணம் முதலிலேயே தோன்றவில்லை?' என்பதுதான். எப்படியோ திருமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்க...