Shadow

Tag: Ilavarasu

DeAr விமர்சனம்

DeAr விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குட் நைட் திரைப்படத்தில் குறட்டை விடும் பிரச்சனையால் நாயகன் பாதிக்கப்படுவான். DeAr இல் அதே குறட்டை விடும் பிரச்சனையால் நாயகி பாதிக்கப்படுகிறாள். பெற்றோரின் அறிவுறத்தலின்படி அந்தப் பிரச்சனை இருப்பதை மறைத்துத் திருமணம் செய்கிறாள். முதலிரவு அன்றே அவளின் முதன்மையான பிரச்சனை தெரியவர, அதைத் தொடர்ந்து எழும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் தான் இந்த DeAr திரைப்படம். கதையின் பிரச்சனை என்ன என்பது தெரியும் போதே, அதன் முடிவும் இதுவாகத் தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட தூரத்தை சுவாரசியமான காட்சிகளாலும், கை தேர்ந்த நடிகர்களின் நடிப்பினாலும் இட்டு நிரப்பி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். திரைப்படத்தின் ஆகச் சிறந்த பலமே அதில் நடித்திருக்கும் கை தேர்ந்த நடிகர் நடிகைகள் பட்டாளம் தான். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷில் துவங்கி, காளி வெங்கட், இளவ...
பார்க்கிங் விமர்சனம்

பார்க்கிங் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மனிதனின் அடிப்படை குணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று காமம், மற்றொன்று கோபம். இந்த இரண்டு உணர்ச்சிகள் மட்டும் தான் அடிப்படையான உணர்ச்சிகள். மற்ற உணர்ச்சிகளான காதல், அன்பு, பாசம், நேசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரக்கம் காட்டுதல் இப்படி எல்லா உணர்வுகளும் நம் கற்பிதங்களால் மனிதனுக்குள் வளர்க்கப்பட்ட விடயங்களே.  இது போன்ற உணர்வுகளை நாம் தலைமுறை தலைமுறையாக கற்பித்துக் கற்பித்து, இன்று மனித இனம் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு உயர் நிலைக்குச் செல்வதே மனிதனுக்கும் மனிதகுலத்திற்கும் பெருமை. ஆனால் ஒரு சூழலில் அதுவும் குறிப்பாக ஈகோ நம் மனதிற்குள் நுழையும் போது, மற்ற எல்லா உணர்வுகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு நம் மனதிற்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான கோபத்திற்கு மட்டும் நாம் தீனி போடத் துவங்கினால் நாம் முற்றிலும் மனிதத்தை இழந்து மிருகமாக மாறிவிடுவோம்....