
சென்றார்கள்! வென்றார்கள்! வந்தார்கள்!
ஏறக்குறைய ஆசஷ் தொடருக்கு இணையாகப் புகழ் பெற்ற தொடர்தான் பார்டர் கவாஸ்கர் டிராஃபியும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே இருக்கும் மிகப் பெரிய வரலாறோ, சில வலிகளோ, கோபங்களோ இல்லாவிடினும், 90களின் மத்தியில் இருந்து இந்திய அணி பெற்று வந்த எழுச்சியும், மிக வலுவான அணியாக இருந்த ஆஸிக்கு, 2000 க்குப் பின்பு நெருக்கடியைக் கொடுக்கும் முக்கிய அணியாக இந்தியா மாறியதும், இந்தக் கோப்பைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வைத்தது.
தவிர, அதே சமயத்தில்தான் இந்தியாவுடனான போட்டியில் எப்போதும் சுவாரசியத்தைக் கொடுக்கும் பாகிஸ்தான் அணியின் திறமையும் மங்க ஆரம்பித்ததால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியாக ஆஸி உடனான போட்டிகள் வந்து நின்றது. சாம்பியனை வீழ்த்தினால், எப்போதும் கூடுதல் சந்தோஷம் அல்லவா?
இந்த முறை, பார்டர் காவஸ்கர் தொடருக்கான டெஸ்ட் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்பு, இரு அணிகளும் 3 வெற்றிகளைப...