Shadow

Tag: India Festive Book

ஹோலி ஜாலி சென்னை | வண்ணங்களால் என்னை நிரப்பு

ஹோலி ஜாலி சென்னை | வண்ணங்களால் என்னை நிரப்பு

Others, காணொளிகள், சமூகம்
வட இந்தியாவின் வசந்த காலக் கொண்டாட்டங்களில் மிக முக்கியமான திருவிழா 'ஹோலி பண்டிகை' ஆகும். மக்களிடையே மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும், இணக்கத்தையும் ஏற்படுத்தி, புது நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்ட விழா ஹோலி. வண்ணங்களாலும், இசையாலும், நடனத்தாலும், இனிப்புகளாலும், மகிழ்ச்சியான குதூகலமான நீர் விளையாட்டுகளாலும் நிரம்பியது ஹோலி. தமிழ்நாட்டில், 'காமன் பண்டிகை' என காதலை முன்னிறுத்தும்விதமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகக் கொண்டாட்டம், சற்று மாறுபட்டு, கோயிலுக்குச் சென்று புதிய தொடக்கத்திற்கான மக்களின் வழிபாடாக உள்ளது. Mohey Rang De (வண்ணங்களால் என்னை நிரப்பு) என்ற பெயரில், இந்த ஆண்டு ஹோலி பண்டிகையைச் சென்னையில் கோலாகலமாகக் கொண்டாட India Festive Book ஓர் அறிவிப்பை ஃபிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியிட்டது. அதில் பங்கு கொண்டு தேர்வானவர்களுக்கான இறுதிப் போட்டி, இன்று சென்னை நாவலூரின் அருகே தாழ...