ஜான் விக் 4 விமர்சனம்
ரஷ்யத் தொன்மவியலின்படி, பாபா யாகா என்பவர் யாராலும் கொல்லப்பட முடியாத மிகவும் ஆபத்தான மனிதர். அவரது பூர்வீகமும் எவருக்கும் தெரியாது, அவரைப் புதைத்தாலும் அவர் மீண்டும் வருவார் என்பது தொன்மவியலின் நம்பிக்கை. அத்தகைய புதிரான குணாதிசயங்களை ஜான் விக்கும் பெற்றிருப்பதால், பாபா யாகா என குற்றவியல் உலகால் அச்சத்துடன் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார்.
அப்படிப்பட்ட அதி பயங்கரமான ஜான் விக்கின் தலைக்கு, 20 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 40 மில்லியன் டாலர் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முதல் பாகத்தில், ஜான் விக்கின் தலைக்கு விலை 2 மில்லியன் அமெரிக்க டாலர்தான். இப்படத்தில், அவரது உயிருக்கான விலைமதிப்பு 200 மடங்காகக் கூடுகிறது. அந்தப் பணத்திற்கு ஆசைப்பட்டு, உலகின் மூலை முடுக்கிலுள்ள வெகுமதி வேட்டையர்கள் பெரும்பாலானோர், ஜான் விக்கைக் கொல்ல சாரை சாரையாகக் கிளம்புகிறார்கள். ஜான் விக் எப்படி இந்தச் சி...