Shadow

Tag: Kanaa movie

கனா விமர்சனம்

கனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் 'கனா'க்கள் திரை கண்டுள்ளது. "விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க" என்றொரு வசனம் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை. விவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என கனவு காண்கிறாள். அந்தக் கனா எத்தனை சவால்களுக்கும், சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே படத்தின் கதை. கெளசல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இது நிச்சயம் ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதா, அதுவும் ஆண...
நண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்

நண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது கனா திரைப்படம். தனது நண்பன் அருண்ராஜா காமராஜாவிற்காகப் படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். "அருண்ராஜா எழுதிய எல்லாப் பாடலும் பெரிய ஹிட் ஆகும்போது, நான் அருண்ராஜாவை இப்படியே செட்டில் ஆகிடாத என்று திட்டுவேன். அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்பது தான் என் கனவும். நம்ம ஊர் பசங்க விளையாடும் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதை எழுதச் சொன்னேன். அவன் இண்டர்நேஷனல், அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதையை எழுதிட்டு வந்தான். நம்ம ஊர்ல நடிக்க ஹீரோயின எங்கடா தேடுறது என்று நான் சொன்னேன். நானே இந்தப் படத்தை தயாரிக்க போகிறேன் என்று சொன்னேன். இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் என்ற பெருமையோடு வெளியாகும் படம், வெளிநாட்டில் யாராவது பார்த்தால் சிரிச்சிடக் கூடாது என்ற பயம் இருந்தது. மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாற...
சிவகார்த்திகேயனின் கனா

சிவகார்த்திகேயனின் கனா

சினிமா, திரைச் செய்தி
மரகத நாணயம் படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், அனிருத்தின் குரலில் "கனா" படத்தில் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளார். "அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்தப் பாடலைப் பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்தப் பாடல் பதிவின் முழு அமர்விலும் நாங்கள் மிகப் பாசிடிவாக உணர்ந்தோம். அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது" என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கனா' படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புறப் பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு. "நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சி செய்தோம். வழக்கமாகப் பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஆனால் நாங்கள் அதைப் பாரம்...