Shadow

Tag: Kannum Kannum Kollaiyadithaal

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இடைவேளையின் பொழுது ஓர் எதிர்பாராத ட்விஸ்ட், படத்தின் முடிவில் புன்னகையை வரவைக்கும் ஒரு ட்விஸ்ட் என படம் ஸ்வீட் சர்ப்ரைஸாய் வந்துள்ளது. படத்தின் தலைப்பைக் கொண்டே இது ஓர் அழகான காதல் படமென யூகிக்கலாம். அப்படிக் காதல் படமாக மட்டும் தேங்கிவிடாமல், ஆன்லைன் குற்றத்தையும், டெக்னிக்கல் குற்றத்தையும், அவற்றை நூல் பிடித்துத் தொடரும் காவல்துறையின் சாமர்த்தியத்தையும் அழகாகக் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மானும், ரிது வர்மாவும் ஒரு காதல் ஜோடி என்றால் விஜய் டிவி புகழ் ரக்‌ஷனும், நிரஞ்சனி அகத்தியனும் ஒரு காதல் ஜோடியாக வருகின்றனர். படத்தை மைய இணைக்கு நிகரான ஒரு ஜோடியாகக் கலக்கியுள்ளனர். சொப்பு பொம்மை போலிருக்கும் சன்னி (Sunny) வகை ஸ்கூட்டரைக் காட்டி நாயகியை அறிமுகப்படுத்த, நிரஞ்சனி அகத்தியனை தண்டர்பேர்ட் புல்லட்டில் அறிமுகப்படுத்துகின்றனர். அவரது அலட்சியம் கலந்த பார்வையு...
துல்கருடன் நடிக்கும் ரக்க்ஷன்

துல்கருடன் நடிக்கும் ரக்க்ஷன்

மற்றவை
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் ரக்க்ஷன் நடிக்கிறார். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்குச் சென்றிருக்கும் புதுவரவு. இது இவர் நடிக்கும் முதல் படமாகும். இந்தப் படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரான்சிஸ் கண்ணூக்கடன். தனக்குக் கிடைத்த முதல் பட வாய்ப்பு பற்றி, ''நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த வேளையில் தான் எனக்கு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச் சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரசியமான கதாபாத்திரமாகும். இந்த வாய்ப்பை எனக்கு தந்த ...