பிக் பாஸ் 3: நாள் 78 | ‘மக்களே! கவின் பண்றதைப் பார்த்துக்கிடுங்க’ – உஷார் செய்யும் சேரன்
சேரனின் எவிக்ஷனுக்குப் பிறகு வனிதா இன்னும் குமுறிக் கொண்டிருந்தார். அவர் கேட்ட கேள்விகளும் மிக மிக நியாயமான கேள்விகள் தான். மிக நன்றாக வேலை செய்பவர், குறை சொல்ல முடியாதபடி டாஸ்க் செய்பவர், அவரால் இந்த வீட்டில் பிரச்சினை என்று சொல்ல எதுவும் இல்லை. வீட்டில் பிரச்சினை வந்த போதும், முடிந்த வரைக்கும் அதைத் தீர்க்கப் பேசியிருக்கார். தனித்தனியாகப் பலருக்கு ஆறுதலாகவும், தேவைப்படும் நேரத்தில் வழிநடத்தவும் செய்துள்ளார். இது மட்டுமில்லாமல் மற்ற எல்லோரை விடவும் மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறவர். அப்படி இருக்கும் போது, சேரனின் வெளியேற்றம் நமக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கு. வனிதாவின் அதிர்ச்சி, கொஞ்சம் மிகையாக இருந்தாலும், அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது.
இந்த வாரம் கவின் தான் போயிருக்க வேண்டுமென ஷெரின் சொன்னதில் விஷயம் இருக்கு. ஒரு பக்கம் சேரனும், இன்னொரு பக்கம் கவினும் இருந்தால் மக்கள் யாருக்கு ஓ...