
ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம்
2014 இல் வெளியாகி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம், ‘கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்’. டேவ் கிபன்ஸும் மார்க் மில்லரும் இணைந்து எழுதிய காமிக் புத்தகமான 'தி சீக்ரெட் சர்வீஸ்’-ஐத் தழுவி உருவாக்கப்பட்ட படம் அது.
‘எக்ஸ்-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ்’ படத்தை இயக்கியிருந்த மேத்யூ வான் தான் அதனையும் இயக்கி இருந்தார். அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, சண்டைக் காட்சிகளில் புதிய யுக்திகள் என இப்படம் படு சுவாரசியமான முறையில் உருவாகி, வியாபார ரீதியாக உச்சத்தைத் தொட்டது!
ஜேன் கோல்ட்மேனும், மேத்யூ வானும் இணைந்து திரைக்கதை அமைக்க, மீண்டும் மேத்யூ வான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். கோலின் ஃபிர்த், தாரோன் எகேர்டன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் தோன்ற, ஜூலியானா மூர் வில்லியாக தோன்றி அசர வைத்துள்ளார். மேலும், ஆஸ்கர் பரிசு பெற்ற ஹேலி பெரி, ஜெஃப் ப்ரிட்ஜஸ், மார்க் ஸ்ட்ராங், எல்டன் ஜான் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் தோ...




