Shadow

Tag: Krishnan Nambi story

காஃப்காவினால் அல்ல!

காஃப்காவினால் அல்ல!

புத்தகம்
ஃபிரான்ஸ் காஃப்கா எனும் எழுத்தாளர் செக்கோஸ்லேவேக்கியா நாட்டில் பிறந்த ஒரு ஜெர்மானிய யூதர். உலகின் மிகவும் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் காஃப்கா உயிருடன் வாழ்ந்த காலம் நாற்பத்தியோரு வருடங்களேயானாலும், அந்தக் குறுகிய காலத்தினுள் அவர் இலக்கியத்தில் புரிந்துள்ள சாதனை மகத்தானது என்கிறார்கள். இவர் எழுதிய 'The Metamorphosis's (உருமாற்றம்) என்கிற கதை மிகவும் பிரபலமான கதை.ஒரு மனிதன் திடீரென ஒருநாள் ஒரு பூச்சியாக மாறி விடுதான விசேஷ கற்பனை. காஃப்காவைப் படித்தவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். தமிழில் 'தங்க ஒரு....' எனும் ஒரு சிறுகதை 1961இல் வெளிவந்தது. க.நா.சு. நடத்திய "இலக்கிய வட்டம்" எனும் பத்திரிகையில் வெளி வந்த இக்கதையை எழுதியவர் கிருஷ்ணன் நம்பி. இக்கதையில் ஒரு போலீஸ்காரனும் அவனது மனைவியும் ,உருவம் சிறுத்து 'லில்லிபுட்' என்கிறோமே அது போல் மாறி, ஒரு பூட்சின்...
தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி

தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி

கதை, படைப்புகள்
அன்புள்ள செல்லா, உன் கடிதம் கிடைத்தது. என்ன செய்யச் சொல்லுகிறாய்? முயற்சியில் ஒன்றும் குறையில்லைknambi . ஒவ்வொரு நாள் மாலையும், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் என்று வேகமாக அலையத்தான் செய்கிறேன். மோட்டார்காரனுக்குக் காசு கொடுத்துக் கட்டி வராது என்று விளக்கெண்ணை வேறு வாங்கி வைத்திருக்கிறேன் காலில் போட்டுத் தேக்க. என் காலைப் பிடித்துவிட நீயும் இங்கு உடனே வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்ன செய்யச் சொல்லுகிறாய், செல்லா, முப்பது ரூபாய்க்கு மேல் போகவும் கூடாது. அதுவே நம் சக்திக்கு மீறியதுதான். போனால் போகிறது என்று கொடுக்கத் தயாராக இருந்தாலும்கூடக் கிடைக்க மாட்டேன் என்கிறதே. நேற்று நடந்த அந்தச் சம்பவம், அந்தக் காட்சி, அதை நீ பார்த்திருக்க வேண்டுமே செல்லா, தேனாம்பேட்டையில்… தேனாம்பேட்டை பக்கம்தான் போய்க்கொண்டிருந்தேன்.. ஒரு சந்து. குப்பையும், சேறும் சாக்கடையும், பன்றிக் கூட்டமும்...