Shadow

Tag: லதா

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

கட்டுரை, மற்றவை
மனிதன் தன் கலை ஆர்வத்தினாலும், உழைப்பினாலும் உருவாக்கிய செயற்கை அழகும், அற்புதங்களும் பார்த்த மாத்திரத்தில் நம்மை வாய்பிளக்க வைத்தாலும் கூட, இயற்கை தன் போக்கில் உருவாக்கி வைத்திருக்கும் அழகின் முன்னால் அவை யாவும் இரண்டாம் பட்சம்தான்.ஒரு காலத்தில் இந்த இயற்கையோடும் அதன் எழிலோடும் இணைந்து வாழ்ந்திருந்த நாம், கால ஓட்டத்தில் நம் தேவைகளை முன்னிறுத்தி இயற்கையை அழித்தே நம் வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைய தலைமுறை இயற்கையை அதன் அழகைக் கனவிலும், காலண்டரிலும் மட்டுமே பார்த்து ரசிக்கும் துர்பாக்கிய நிலைமைக்கு வந்துவிட்டது.பரபரப்பான நம் வாழ்க்கைச் சூழலில் இயற்கைக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.இயற்கை என்று சொன்னாலே மலையும், மலை சார்ந்த பிரதேசமும்தான் நம் மணக்கண்ணில் விரிகிறது. மலை தன்னுள்ளே அழகையும், அதன் ரகசியங்களையும் கொட்டிக் குவித்து வைத்திருப்பதை அதனூடே பயணித...
வட அமெரிக்காவில் இலையுதிர்காலம்

வட அமெரிக்காவில் இலையுதிர்காலம்

கட்டுரை, மற்றவை
இந்த வர்ணஜாலங்களைக்கண்டுகளிக்க ஏதுவாகப்பலரும் பிரயாணம் செய்யும் வகையில் மலையோர ரயில்களும், மலைப்பிரதேசங்களும் ஆயத்தமாக இருக்கும். Vermont, NY மாநிலங்களைச் சுற்றி இருக்கும் மலைச் சூழந்த காடுகளின் அழகை ரசிக்க வேண்டிப் பலரும் படையெடுக்கும் நேரமிது.ஒவ்வொரு மரத்திலும் பல வண்ண வண்ண இலைகள். அவை தரையெங்கும் உதிர்ந்துக் கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் அழகே அழகு!இந்தப் பருவத்தில் வரும் மழையும், காற்றும் இலைகளை உதிர வைத்து இலையுதிர்காலம் முடிந்தது, பனிக்காலத்திற்குத் தயாராகுங்கள் என்று மொட்டையாய் நிற்கும் மரங்களையும், மனிதர்களையும் பார்த்து சொல்வது போல் இருக்கும். காலையில் கண் விழித்துப் பார்த்தால் மூடுபனியினால் போர்த்தப்பட்ட புல்வெளிகள், நீர்த்தெளித்து விட்டதைப்போல் சாலைகள், 'சில்'லென்ற அதிகாலைத் தென்றல், புகைமூட்டம் போல் இருக்கும் அடர்ந்த மூடுபனியில் பள்ளிக்குச் செல்...
இனியாவது ஒரு விதி செய்வோம்!

இனியாவது ஒரு விதி செய்வோம்!

கட்டுரை, சமூகம்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த காலம் எல்லாம் மலையேறி, இன்று பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தற்போதைய நிலையில் ஒருவரின் வருமானத்தில் குழந்தைகளின் படிப்பு, குடும்பச் செலவுகள், விலைவாசி உயர்வு, மற்றும் இன்ன பிற செலவீனங்களை சமாளிப்பது கடினம் என்றாகி விட்டதால் கணவன் மனைவி என இருவருமே வேலைக்குப் போக வேண்டிது அவசியமாகிறது. இப்படி வேலைக்குப் போகும் பெண்களில் இரண்டு வகையினர். ஒரு சாரார் தாங்கள் கற்ற கல்வியின் பயனை அடைய வேண்டி, தாங்களே விரும்பி வேலைக்குச் செல்பவர்கள், மற்றவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நிர்பந்தங்களுக்குப் பணிந்து வேலைக்குச் செல்கிறவர்கள். எது எப்படி இருந்தாலும், ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், சவால்களும் கடினமானவையே.என்ன தான் கிடுகிடுவென்று காலம் மாறி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நாம் சொல்லிக்...
அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே!

அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே!

கட்டுரை, சமூகம்
  கல்வியையோ, செல்வத்தையோ தேடி வெளிநாடு வருகிறவர்கள், வந்த வேலை முடிந்தவுடன் தாயகம் திரும்புகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்பது தான் நிதர்சனம். படிக்க வந்தவர்கள் வேலை தேடி செட்டிலாகிறார்கள். வேலை கிடைத்தவர்கள்  மெல்ல மெல்ல வெளிநாட்டு வாழ்க்கையில் உழல ஆரம்பித்து,  இன்னும் சில வருடம் சில வருடம் எனத்  தள்ளிப் போட ஆரம்பித்து, திருமணம் முடியட்டும் எனக்  காத்திருந்து,  பிறகு குழந்தை, அப்பா, அம்மா, மாமனார், மாமியார் விஜயம் எல்லாம் முடிந்த பிறகு, சரி! ஊருக்குப் போய் விடலாம் என நினைக்க ஆரம்பிக்கும் போது , எனக்கு இங்கு தான் பிடித்திருக்கிறது  என கலங்கும் அன்பு மனைவியின்  கண்களை காணச் சகிக்காமல் அமைதியாக செட்டிலாகி விடுகிறவர்கள் ஒரு பக்கம், இப்படி வெளிநாட்டுச் சூழலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டோ அல்லது அடிமையாகியோ செட்டிலாகி விடுகிறார்கள்.   ...
இக்கரைக்கு அக்கரை பச்சை!

இக்கரைக்கு அக்கரை பச்சை!

கட்டுரை, சமூகம்
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின் மீது நம்மில் பலருக்கும் ஏதோவொரு இனம் புரியாத மோகம் இருக்கும். அல்லது அது மாதிரி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். மேலை நாடுகள் என்றாலே, அங்கே தேனும் பாலும் ஓடுவதைப் போலொரு மாயத்தோற்றத்தை நமது கல்விமுறையும், சமூகக் கருத்தியலும் நமக்குள் உருவாக்கி விட்டிருக்கிறது. அதிலும் இந்த நாடுகளில் வேலை கிடைத்து, நாம் அங்கே போகப்போகிறோம் என்றவுடன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்ததைப் போன்று ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இது மேல்படிப்புக்காக செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும். இப்படிக் கனவுகளோடு வருகிறவர்கள் எதிர்கொள்ளும் ஆரம்பக்கால அவஸ்தைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. என்ன தான் போகப்போகிற ஊரை/நாட்டைப் பற்றி விவரங்கள் தெரிந்திருந்தாலும் கூட, வந்து இறங்கியவுடன் ஒரு அந்நிய உணர்வும், வெறுமையும் சூழ்ந்து கொள்வதை தவிர்க்க முடியாது. இதன...