Shadow

Tag: லதா

வாத்துகள் – இயற்கையின் பெருங்கொடை

வாத்துகள் – இயற்கையின் பெருங்கொடை

கட்டுரை, சமூகம்
நீரிலும், நிலத்திலும் வாழும் பறவை இனம் இந்த மல்லார்ட் வாத்துகள். பனிக்காலத்தில் உறைந்த குளங்களின் மேல் வழுக்கிக் கொண்டு நடந்து செல்வதும், கூட்டமாக நெருங்கி நின்று பனிக்காற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதும், சில பறவைகள் தெற்கு நோக்கிப் பறந்து போவதுமாய்க் கடும் குளிர், பனி, வெயில், மழையிலிருந்து இவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் அதன் இறக்கைகளே கவசங்களாக இருக்கிறது. ஆறுகள், ஏரி, குளங்களென நீர்நிலைகள் தோறும் இவற்றைக் காண முடிகிறது. பல வண்ணங்களில் பெண் வாத்துகளைக் கவரும் வண்ணம் வசீகரமாக ஆண் வாத்துகள். அதற்கு நேர்மாறாகப் பெண் இனங்கள். ஜோடியாகவே சேர்ந்து திரியும் வாத்துக் கூட்டம் மழைக்கால முடிவில் ஆண் வாத்துகள் மட்டுமே தனியாகச் சுற்றிக் கொண்டிருக்க, பெண் வாத்துகள் ஒன்று அல்லது இரு வாரங்களுக்குத் தினம் ஒரு முட்டையிட்டு அடைகாத்து ஒரு மாதத்திற்குள் குஞ்சு பொரித்து விடுகிறது. கோடைக்காலத்தில் தன் கு...
H1-B கலையும் கனவுகள்

H1-B கலையும் கனவுகள்

கட்டுரை, சமூகம்
அமெரிக்கா, கனவுகளின் தேசம். தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் வாரி வாரி வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கிற தேசம். இங்குக் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம், தொழில் வாய்ப்புகள் உலகெங்கிலும் இருந்து தொழில் முனைவோரைத் தன்பக்கம் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், அவற்றின் வர்த்தகம், விரிவாக்கம் என அமெரிக்கப் பொருளாதாரம் எல்லாத் திசைகளிலும் வளரத் துவங்கியபோது அதை நிர்வகிக்க, முன்னெடுக்கத் தொழிலாளர்கள், வேலையாட்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தட்டுப்பாடு உருவானபோது, உலகெங்கிலும் இருந்து அடுத்தகட்ட குடியேற்றங்கள் அமெரிக்க மண்ணில் நிகழத்துவங்கின. இதனால்தான் நூற்றாண்டுகள் கடந்தும் போட்டிபோட்டுக் கொண்டு உலகெங்கிலும் இருந்து அமெரிக்க மண்ணில் கனவுகளோடு வந்து இறங்குகிறவர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை. வேலைதேடி அமெரிக்காவிற்கு வருகிறவர்களை நெறிப்பட...
அட்சய திருதியையின் அரசியல்

அட்சய திருதியையின் அரசியல்

கட்டுரை, சமூகம்
லட்சங்களைக் கொட்டிய விளம்பரங்கள். அழகிய பெண்களின் ஜொலிக்கும் நகை அலங்காரங்கள், அணிவகுப்புகள். மாயப்பேச்சுக்கள். மயக்கும் சலுகைகள். தள்ளுபடிகள், தவறவிடாதீரெனச் செல்லமாய் மிரட்டும் பிரபலங்கள். அடுத்த சில தினங்களுக்கு இந்த அட்சயதிரிதியை அத்துமீறல்கள் இன்னும் ஆர்ப்பாட்டமாய் இருக்கும். ஒன்றுமில்லாதவைகளை ஊதிப் பெருக்கி ஏதோ வாரது வந்த வாய்ப்பு என்பதைப்போல நுகர்வோரை நம்பவைக்கும் மூளைச்சலவைதான் நுகர்வு கலாச்சாரத்தின் மிகப்பெரிய சாபக்கேடு. இதனால் நுகர்வோருக்கு சின்ன எலும்புத்துண்டுகளும், கார்பப்ரேட் கயவாளிகளுக்கு கொள்ளை லாபமும் சர்வ நிச்சயம். சித்திரை மாத அமாவாசையில் இருந்து மூன்றாவது நாள் அட்சயதிருதியை தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழில் மொழிபெயர்த்தால் அள்ள அள்ள குறையாத நாள் எனப் பொருள் கொள்ளலாம். இந்த நாளுக்கு நிறைய புராண கதைகள் இருந்தாலும், அடிப்படையில் இந்த நாளின் நல்ல எண்ணங்கள், செயல்கள், ...
கிச்சன் கில்லாடியான கதை

கிச்சன் கில்லாடியான கதை

சமூகம், மருத்துவம்
விறகு அடுப்பு, மண்ணெண்னை ஸ்டவ், ரம்பத்தூள் அடுப்பு, கரி அடுப்பு, கேஸ் சிலிண்டர், மைக்ரோவேவ் ஓவன், இண்டக்ஷன் ஸ்டவ் என அத்தனையும் பார்த்த ஒரே தலைமுறை என்பதில் எனக்கு எப்போதுமே பெருமைதான். அடுப்புகள் மாறியதால் சமைக்கும் நேரத்தோடு சமையலின் ருசியும் தரமும் குறைந்து போனதென்னவோ உண்மை. போதாத குறைக்கு உடனடி உணவுகள் என்கிற பெயரில் கெமிக்கல் குப்பைகள் நம்மை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன. என்ன செய்வது? எல்லோருக்கும் அவசரம். நேரமின்மை. நாக்கிற்கு ருசியாக, மனதிற்கு இதமாக, உடலுக்கும் தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான சமையல் என்பது வீட்டில் சமைத்தால்தான் உண்டு. நம்முடைய இந்திய உணவு வகைகள் எல்லாமே ஏகப்பட்ட முன் தயாரிப்புகள், பக்குவம், படிநிலைகள் எனச் சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடியவை. இதை நினைத்தே பல பெண்கள் அயர்ச்சியாகி இன்ஸ்ட்ண்ட் உணவுகளை நாடுகின்றனர். வார இறுதியில் ஏதாவது ஒரு உணவகம் போய்ப் பிடித்...
அக்கரைக்கு இக்கரையே பச்சை!

அக்கரைக்கு இக்கரையே பச்சை!

கட்டுரை
இந்த முறை ஆல்பனியில் இருந்து கலிஃபோர்னியாவுக்கு, அதாவது கிழக்குக் கரையில் இருந்து மேற்குக் கரைக்குப் பயணம். வெறும் சுற்றுலா என்பதோடு மட்டுமில்லாமல் பல வகையில் எங்களுக்கு இது முக்கியமான பயணம். கடைசி நேரத்தில் வீட்டை ஒழுங்கு செய்து, எல்லோரையும் நேரத்துக்குக் கிளப்பிவிடும் வழக்கமான களேபரங்களை எல்லாம் சமாளித்து, அதிகாலை விமான நிலையம் வந்திறங்கினால், தன்னுடைய கேமரா பையை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன் எனச் சொல்லி கணவர் மட்டும் திரும்ப வீட்டுக்குப் போய் வந்து, ஒருவழியாய் செக்கிங் சம்பிரதாயங்களை முடித்து விமானத்தில் உட்காரும் வரை பதட்டமோ பதட்டம்தான். ஊரே தூங்கிக் கொண்டிருக்கையில் விமானநிலையம் மட்டும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. இருள் விலகாத, அதிகாலை விமானப் பயணங்கள் எப்போதுமே சுகமானவை. சூரிய உதயத்தை மேலிருந்து பார்க்கும் வாய்ப்பு. குடும்ப வழக்கத்தின்படி யாருக்கு ஜன்னலோர சீட் கிடைத்தாலும்...
மதுரையின் திருவிழா – மக்களின் திருவிழா

மதுரையின் திருவிழா – மக்களின் திருவிழா

கட்டுரை, சமூகம்
இதோ இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது மாமதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதி நிறைவுக்கு வந்திருக்கிறது. நேற்று திருக்கல்யாணம் கண்ட சொக்கநாதரும், மீனாட்சியும் இன்று காலை மதுரை வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி தேரோடியிருக்கிறார்கள். திருவிழாவின் இரண்டாம் பகுதியாக, நாளைக் காலையில் இந்த விழாவின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான கள்ளழகர் மதுரைக்குள் வருகிறார். அடுத்த நாலைந்து நாட்களுக்கு அவர் போகும் இடமெல்லாம் அமளிதுமளியாகும். திருவிழாக்கள் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை, இயல்பைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு. அந்த வகையில் திருவிழாக்களின் நகரம் என்றால் அது எப்போதும் மதுரைதான். வருடம் முழுக்க ஏதாவது ஒரு திருவிழா அதற்கேயுரிய தன்னியல்போடு, கொண்டாட்டங்களோடு நடந்துகொண்டே இருக்கும். பங்குனி மாதமே இந்த மெகா திருவிழாவிற்கான வேலைகள் ஆரம்பித்துவிடும். மீனாட்சிஅம்ம...
இனியொரு விதி செய்வோம்.!

இனியொரு விதி செய்வோம்.!

கட்டுரை, சமூகம்
அமெரிக்க அரசு அக்டோபர் மாதத்தை குடும்ப வன்முறை விழிப்புணர்வு (Domestic Violence Awareness) மாதமாக அனுசரிக்கிறது. இது தொடர்பில் நிறைய கருத்தரங்கங்கள், விவாத நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடத்தப்படுகின்றன. நான்கில் ஒரு பெண் உடல், உளவியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்றும் இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.தன்னுடைய துணையை அல்லது குடும்ப உறுப்பினர்களை அடிப்பது, அச்சுறுத்துவது, பாலியல் ரீதியாக சித்திரவதை செய்வது, உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவது, திருமணப் பந்தத்தை முறித்து விடுவதாக பயமுறுத்துவது, குடும்பத்தை நிர்கதியாய் விட்டுவிட்டு வெளியேறி விடுவேன் என்றோ, குடும்ப உறுப்பினர்களை வீட்டை விட்டு விரட்டி விடுவேன் என்றோ பயமுறுத்துவது என பல்வேறு முகங்களைக் கொண்டதுதான் குடும்ப வன்முறை. படித்தவர், பாமரர், ஆண், பெண், இனம், மொழி, மதம், நா...
லாஸ் வேகஸ்

லாஸ் வேகஸ்

கட்டுரை
எந்த முகூர்த்தத்தில் எங்கள் ஊருக்கு ‘ஆல்பனி’ என்று பேர் வைத்தார்களோ தெரியவில்லை, வருடத்தின் முக்கால் வாசி நாட்களுக்கும் மேலாய்க் கொட்டும் பனியும், நடுங்கும் குளிருமாய் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் டிசம்பர் மாதப் பனியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். போன வருட டிசம்பர் மாத பனியிலிருந்து சில நாட்களாவது தப்பிக்க என்ன செய்யலாமென யோசித்த போதுதான், குளிர் குறைவான லாஸ் வேகஸ் பயணத்திட்டம் உதித்தது. கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்த மகளுக்கு இந்தப் பயணத்திட்டம் பிடித்துப் போக மகனுக்கு அத்தனை இஷ்டமில்லை. ”ஏம்ப்பா, சரியா டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் அன்னிக்கே கிளம்பனுமா? எனக்கு கிறிஸ்துமஸ் கிப்ஃட் இல்லையா?? அடுத்த நாள் போகலாமே....” என சுணங்கியவனிடம், “இதுதான் இந்த வருட கிறிஸ்துமஸ் பரிசு” என்று சொன்னதில் மிகவும் கடுப்பாகி விட்டான். ஒரு வழியாகப் பேசி, உனக்கான கிஃப்ட்டை இந்தவருடம் சாண்டா ஆன்லைன...
நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

கட்டுரை, சமூகம்
கடந்த நவம்பர் மாதக்கடைசியில் வெளியான ஒரு தீர்ப்பு அமெரிக்க மண்ணில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கிவிட்டது. நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கலவரங்கள் என எங்கும் பதட்டம். எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதைப் போல ஊடகங்களும் தங்களால் முடிந்த வரை பிரச்சினையை ஊதிப் பெருக்க, அதிபர் ஒபாமாவே டிவியில் தோன்றி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலவரம் கலவரமாயிருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினை இதுதான்.. மிசௌரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் எனும் ஊரில், ஒரு கடையில் திருடியதாக சந்தேகிக்கப்பட்ட கருப்பின இளைஞன் ஒருவனைப் பிடிக்க போலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்ட அதிகாரி வில்சன் வெள்ளை இனத்தவர். வில்சன் தன்னுடைய வாக்கு மூலத்தில் அந்த இளைஞன் தன்னைத் தாக்கி தன் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, வேறு வழியில்லாமல் தற்காப்புக...
சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை

சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை

சமூகம்
செப்டம்பர் மாதத்தின் இன்னொரு காலைப் பொழுது.. பெரியம்மா வீட்டில் இருந்ததால் மகனைப் பற்றிய கவலை இல்லை. வீட்டில் வேலைகளை முடித்து, பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த மகளை பஸ்ஸில் ஏற்றி விட்டு நானும் ஆஃபீசுக்குக் கிளம்பினேன். இப்போது பள்ளிகள் திறந்து விட்டதால் வழக்கமான ட்ராஃபிக்குடன் குழந்தைகளை அழைத்துச் செல்லும் மஞ்சள் நிற பஸ்களின் கூட்டமும் சேர்ந்து கொள்ள எல்லாச் சாலைகளிலும் கூடுதல் வாகன அணிவகுப்பு. இது போன்ற காலை பரபரப்பில் வண்டி ஓட்டுகையில் ரேடியோவில் ஒளிபரப்பாகும் நகைச்சுவையான உரையாடல்களையும் பாடல்களையும் கேட்டுக் கொண்டே ட்ரைவ் செய்வது பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர். காரை நிறுத்திவிட்டு அலுவலகத்தில் நுழையும் வரை எதிர்படுவோரைப் பார்த்துப் புன்னகைப்பதும், தெரிந்தவர்களுக்கு குட்மார்னிங் சொல்லிக் கொண்டு கடந்து போவதும் எனக்கு அனிச்சையான ஒன்றாகி இருந்தது. பதிலுக்குக் கிடைக்கும் புன்னகையும், குட்மார்னிங்க...
எங்கே போனாய் ரெனி!?

எங்கே போனாய் ரெனி!?

கட்டுரை, சமூகம்
மார்ச் மாதம் நான்காம் தேதி, மாலை நேரத்தில் என் மகளிடமிருந்து ஃபோன். பதட்டமான குரலில் அம்மா, “எதிர் வீட்டு ரெனி காணாமல் போய் விட்டான். அவன் நண்பர்கள் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார்கள். உனக்கு விஷயம் தெரியுமா?” என்றாள். “அப்படியெல்லாம் இருக்காது. இரண்டு நாள் முன்பு அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, மே மாதத்தோடு கல்லூரிப் படிப்பு முடிந்து விடுமென்றும், கலிஃபோர்னியாவில் வேலை கிடைத்துவிடும் என்றும், அவனுக்கு அங்கே ஒரு அபார்ட்மென்ட் பார்த்துக் கொடுக்க வேண்டும், புது கார் வாங்க வேண்டும் என்று பெருமிதமாய்ப் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.. மேலும் லண்டனில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளும் spring break என்று ஒரு வாரம் விடுமுறையில் வந்திருப்பதை எத்தனை மகிழ்ச்சியாகச் சொன்னார்? அப்படி எல்லாம் இருக்காது.. நீ யாரையோ நினைத்துப் பேசுகிறாய்” என்றேன் மகளிடம்,. கொஞ்ச நேரத்தி...
நியூயார்க் இந்தியத் தூதரகம் – ஓர் அவஸ்தையான அனுபவம்

நியூயார்க் இந்தியத் தூதரகம் – ஓர் அவஸ்தையான அனுபவம்

அரசியல்
அப்பா இறந்துவிட்டார். உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போலிருந்தது அந்த தகவல்.அந்தச் செய்தியின் தாக்கத்தை, அது தந்த உணர்வுகளை அதன் அடுத்தடுத்த கட்டத்தை உள்வாங்கவே முடியாமல் ஸ்தம்பித்த ஒரு நிலை. உடனே அம்மாவை, அக்காவை, தம்பிகளை, தங்கையைப் பார்த்தே ஆகவேண்டும் என்பது மட்டும் தோன்றியது. இச்சமயத்தில் அவர்களோடு நானிருக்க வேண்டும். அது மட்டுமே எங்கள் துயரத்தைத் தணிக்க முடியும். இப்படி ஏதேதோ தோன்றி மறைந்த துயர நிலை. கணவரும் குழந்தைகளும் தேற்றினாலும், தீராத துயரநிலை. உடனடியாக நான் மட்டும் இந்தியா கிளம்புவது என்று முடிவெடுத்து பயண ஏற்பாட்டைத் துவக்கினால், எனக்கு விசா வாங்கவேண்டும் என்பது நினைவுக்கு வர, எதுவும் தோணாமல் நான் மட்டும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரயிலில் நியூயார்க் போக முடிவெடுத்தேன். முதல் முறையாக கணவரின் துணையில்லாமல் நியூயார்க் பயணம். இந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது, அங்கே யாரைப் பா...
கற்றதனாலாய பயன்

கற்றதனாலாய பயன்

கட்டுரை, சமூகம்
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'திருத்தப்பட வேண்டியவர்கள்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நமது கல்வியமைப்பு, அதன் தேர்வு முறைகள், விடைத்தாள் திருத்தும் முறைகளில் நிலவும் அபத்தங்களைச் சொல்லும் கட்டுரை அது. இதன் நீட்சியாக, நமது கல்விமுறையின் இந்தப் பக்கங்களை ஒரு மாணவியாகவும், பின்னாளில் ஒரு கல்லூரி ஆசிரியையாகவும் கடந்து வந்த எனது அனுபவத் தெளிவுகளைப் பகிர்வது சரியாக இருக்கும் என்பதால் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். மாணவியாக இருந்த காலத்தில் பரிட்சை ஹாலில் சில மாணவ மாணவியர் செய்யும் திருட்டுத்தனங்கள், அது தொடர்பான குறும்புகள், அவர்களைக் கண்டுபிடிக்க, ஆசிரியர்கள் சுற்றிச்சுற்றி வந்ததெல்லாம் இப்போதும் நன்கு நினைவில் இருக்கிறது. பின்னாளில் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது பல கல்லூரிகளுக்கும் தேர்வு மேற்பார்வையாளராகச் சென்ற போது எதிர் கொண்ட அனுபவங்...
அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!?

அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!?

கதை, நம்பினால் நம்புங்கள், படைப்புகள்
‘ஆர்வக் கோளாறில் இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே! இப்போது இங்கிருந்து எப்படி வெளியே போவது?’ என்று தெரியாத பதட்டத்தில் அல்லாடிக் கொண்டிருந்தான் வெங்கடேஷ். சுமாவிற்கு மட்டும் இது தெரிந்தால் அவ்வளவு தான்! நேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது. வெங்கட் என்ற வெங்கடேஷ் ஃபோட்டோ எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன். காமெரா என்பது ஒரு சாதனமே. நம் பார்வையில் தெரியும் காட்சிகளை மிக அழகான கோணத்தில் படமாக்குவதுதான் கலை என்று பாலுமகேந்திரா எப்போதோ ஒரு பேட்டியில் சொன்னதை வேதவாக்காகக் கொண்டு சதாசர்வகாலமும் அழகான காட்சிகளைத் தேடி காமெராவும் கையுமாகவே திரிபவன். பனிப்புயலின் புண்ணியத்தால் நியூயார்க் நகரம் முழுவதும் வெண்பனிக் குவியலால் உறைந்திருந்தது. வழக்கமாய் படம் எடுக்கும் ஏரியைச் சுற்றி வந்த போது அவனுக்கு ஏற்பட்ட விசித்திரமான உந்துதலில் மரங்கள் சூழ்ந்த அமைதியான கல்லறையில் படம் எடுக்கலாம் என தீர்மானித்துக் கல்லறை தோட...
இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம்

கட்டுரை, மற்றவை
பரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப் பற்றிப் படித்ததும் கேட்டதும் தான் உண்டு. அதன் பூகோள அமைப்பு, உணவு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் என பல்வேறு அம்சங்கள் நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். அதுவும் இங்குள்ள ஐம்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் செயற்கை, இயற்கைச் செல்வங்கள் எவரையும் அதிசயத்தில் ஆழ்த்தும். கனடாவில் இருந்து அமெரிக்கா வருகிறவர்களே இந்த வித்தியாசங்களைப் பார்த்து வாய் பிளக்கும் போது இந்தியாவில் இருந்து வந்த என் போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.வடகிழக்கில் 'ஜோ' வென்ற இரைச்சலுடன் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய நயாகரா நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், குறுகிய, அகலமான, நெரிசலான தெருக்கள், ஓங்கி உயர்ந்த பளபளக்கும் கட்டடங்கள், சாலைகளில் மஞ்சள் நிற வாடகைக் கார்கள், பரபரப்பான நக...