Shadow

Tag: Leigh Whannell

தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பாறையில் கடல் அலைகள் மோதி, அந்த நீரலைகள் கீழே விழும் பொழுது 'தி இன்விசிபிள் மேன்' எனப் பெயர் போடுவதே அட்டகாசமாக உள்ளது. மலையுச்சியில் இருக்கும் பங்களாவில் இருந்து செசிலியா காஸ் எனும் பெண், தப்பிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்குத் தொற்றிக் கொள்ளும் பதற்றம் படம் முழுவதுமே தொடர்கிறது. பல இடங்களில், பெஞ்சமின் வால்ஃபிஷின் பின்னணி இசை மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது. அந்தத் தொந்தரவு, செசிலியா காஸிற்குக் கண்ணுக்குப் புலனாகாத அவளது காதலன் ஆட்ரியன் தரும் டார்ச்சர். தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடும் ஆட்ரியன், தான் கண்டுபிடித்த மாயமாகும் உடையை அணிந்து கொண்டு, செசலியா காஸ் யாருடனெல்லாம் நெருக்கமாக இருக்கிறாளோ அவர்களிடம் இருந்தெல்லாம் பிரிக்கிறான். மனதளவில் அவளை முடக்கும் முயற்சியில், செசிலியாவின் சகோதரியையே கொன்று அந்தப் பழியையும் செசிலியா மீது போடுகிறான் ஆட்ரியன். கண்ணுக்குத் தெரியாத ஒரு...
கட்புலனாகாத சைக்கோ மனிதன்

கட்புலனாகாத சைக்கோ மனிதன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘தி இன்விசிபிள் மேன்’ எனும் அறிவியல் புனைவு நாவலை 1897 இல் எழுதினார் H.G.வெல்ஸ். அதை அடிப்படையாகக் கொண்டு, 1933 இல் ‘தி இன்விசிபிள் மேன்’ எனும் திரைப்படம் உருவானது. அதைத் தொடர்ந்து, 1940 இல் 'தி இன்விசிபிள் மேன் ரிட்டர்ன்ஸ்', 1951 இல் 'அபோட் அண்ட் காஸ்டெல்லோ மீட் தி இன்விசிபிள் மேன்', 1984 இல் சோவியட் படமான 'தி இன்விசிபிள் மேன்', 2000இல் வெளிவந்த 'ஹாலோ மேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, H.G.வெல்ஸின் நாவலைத் தழுவி, 'தி இன்விசிபிள் மேன் (2020)' படம் வ்ளியாகவுள்ளது. பணக்காரனும், அதிமேதாவி விஞ்ஞானியுமான ஆலிவர் ஜாக்ஸன் கோஹனின் வன்முறையைக் கையாளும் உறவில் இருந்து, ஓரிரவு தப்பிச் சென்று தலைமறைவாகிறார் செசிலியா காஸ். ஒருநாள் ஆலிவர் ஜாக்ஸன் கோஹன் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது பெரும் சொத்து செசிலியா காஸ்க்குக் கிடைக்கும்படி உயில் எழுதி வைக்கிறான். அவன் இறந்துவிடவில்லை, அரூபமாய் மாறி தன்னை டார்ச்சர்...