ராமன், எத்தனை ராமனடி?
ஆந்திரத்தில் பயணம் செய்யும் போதெல்லாம் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு கோதாவரியின் மீதுள்ள பற்று. அடுத்ததாக ராமனின் மீது அவர்களுக்கு இருக்கிற அபாரமான பிரேமை. வியப்பு. வாத்சல்யம். எனக்கு அது சற்று மிகையாகவே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது. அவர்கள் எப்போதுமே சற்று அதிகம் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள் என்ற பிம்பம் எனக்குள் இருந்ததாலும் இருக்கலாம். ஒரு பக்கம் தெலுங்கானா பிரச்சினை. நக்சலைட் நெருப்பு. இதற்கு நடுவில் ராம பக்தி. எந்த ராமன்? தியாகராஜ சுவாமிகளின் பாடல்களில் நின்றும், நடந்தும், கிடந்தும் என வருகிற ராமன். மனித குல மாணிக்கம் என்று கம்பன் சிலாகிக்கிற ராமன். இந்தியாவில் எங்கு போனாலும் இது ராமர் வில் ஊன்றிய இடம், சீதை இருந்த இடம், அனுமன் தாவிய இடம் என்று குருதிக்கோட்டுடன் வரும் தொன்மங்கள் ஊற்றெடுக்கும் ராமன். நாட்டார் கலைகளில் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கும் ராமன். சீதையின் பிரிவுக...