
“நான் தான் அந்த பஃபூன்” – மீண்டும் வடிவேலு!
லைகா நிறுவனம் சார்பில் 'புரொடக்சன் 23' என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் இயக்குநர் சுராஜ் பேசுகையில், ''கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோகமயமாக இருந்தபோது நானும் வடிவேலுவும் சிரித்துப் பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ-என்ட்ரி முழுநீள நகைச்சுவைப் படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்துச் சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனைத் தொடங்க நினைத்த போது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன் மூலம் சுபாஷ்கரனிடம் பேசினோம். அவர் வடிவேலுவின் பிரச்சனைகளைத் தீர்...










