
The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்
யாரோ ஒருவர் யாருக்கோ அழைத்த சில நொடி தொலைபேசி உரையாடல், உங்கள் மனதைக் கனக்கச் செய்துவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஜெர்மனியில் இருந்து வரும் அப்படிப்பட்ட ஓர் அழைப்பு, எமர்ஜென்சி ரெட் கிரெஸென்ட் கால் சென்ட்டரில் பணி புரியும் ஓமரைப் பாதிப்பது போலவே படம் பார்ப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. பின், மறுபடியும் ஒரு தொலைபேசி அழைப்பு. துப்பாக்கிச் சூடு ஒலிகளுக்கு நடுவில், ஆறு வயது பெண் குழந்தை ஒன்று, தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி இறைஞ்சுகிறது. தன்னுடன் காரில் வந்த ஆறு பேரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் உடம்பெல்லாம் ரத்தம் என்கிறது அக்குழந்தை. ஆறு பிணங்களுக்கு மத்தியில் காருக்குள் ஒரு ஆறு வயது குழந்தை மட்டும் கால் சென்ட்டர் ஆட்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது என படம் தொடங்கிய 25 ஆவது நிமிடத்தில், நம் மொத்த உலகத்தையும் காலுக்கடியில் நழுவ வைத்து விடுகிறது. சுமார் இரண்டரை மணி நேரம...


