பிக் பாஸ் 3 – நாள் 30
காலையில் வெளிய வந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே திகைத்துப் போய்விட்டனர். அட்டகாசமான கிராமிய செட் போடப்பட்டிருந்தது. 'ஆஹா இன்னிக்குப் பெருசா ஒரு டாஸ்க் கொடுக்கப் போறாங்க, நிறைய கன்டென்ட் கிடைக்குமென நம்பி உட்கார்ந்தேன். அதற்கேற்ற மாதிரி டாஸ்க்கும் வந்தது. வீட்டை இரண்டு அணியாகப் பிரித்து, இரண்டு கிராமமாக மாற்றினர். இந்த இரண்டு கிராமத்துக்கும் ஒத்துக்காது, எப்பொழுதும் சண்டை. வீட்டில் இருக்கின்ற கிச்சன் ஏரியாவுக்கு, மதுமிதா தலைவி, பாத்ரூம் ஏரியாவுக்கு சேரன் தான் தலைவர். இந்த அணியைச் சேர்ந்தவங்க அடுத்த ஏரியாவுக்கு போகனும் என்றால் அவங்க சொல்ற டாஸ்க் செய்யவேண்டும்.
பிக் பாஸ் ஒவ்வொருவரையாக அழைத்து, கேரக்டர் எப்படிச் செய்யணுமெனச் சொல்லிக் கொண்டிருந்தார்.
சேரன் - ஊர் நாட்டாமை
மீரா - மகனை கைக்குள் வைத்துக் கொள்ளும் தாய்
தர்ஷன் - அம்மாவுக்கு அடங்கின பையன், ஆனா பொண்டாட்டி மேல பாசமாக இருப்...