“இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி” – வெற்றிமாறன் | தனுஷ்
கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.
இயக்குநர் வெற்றிமாறன், “இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி. அது எப்போதும் நிலையானது. இங்கு நம் வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் அவர் உடன் இருந்தி...