Shadow

Tag: Michelle Rodriguez

Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்

Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் டேபிள் டாப் விளையாட்டின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட படமிது. டன்ஜியன் என்றால் பாதாளச் சிறை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் பதினான்காம் நூற்றாண்டில் வழக்கத்திற்கு வந்த இந்த ஆங்கிலச் சொல், ஃப்ரெஞ்சு சொல்லின் மூலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘அரண்மனையின் கோபுரம்’ என்ற பொருளிலேயே உபயோகப்படுத்தியுள்ளனர். காலப்போக்கில், பாதாளச் சிறையைக் குறிக்கும் சொல்லாக டன்ஜியன் மாறியுள்ளது. டிராகன் என்பது ஐரோப்பியத் தொன்மவியலில் வரும் நெருப்பைக் கக்கும் அமானுஷ்ய விலங்காகும். இறந்துவிடும் தன் மனைவியின் உயிரை மீட்பதற்காகத் தேவைப்படும் ஒரு மந்திரப்பதக்கத்தைத் திருட முற்படுகிறான் எட்கின் டார்விஸ். தோழி ஹோல்கா கில்கோர், இளம் மந்திரவாதி சைமன் ஒளமர், ஃபோர்ஜ் எனும் ஏமாற்றுக்காரக் கலைஞர், சிவப்புச் சூனியக்காரி சோஃபினா ஆகியோருடன் குழுவாகச் சென்று, மந்திரப்பதக்கத்தைத் திருடிவிட்டாலும்...
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 'தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஆரம்பமே அதகளமான கார் ரேஸில் தொடங்குகிறது. ரசிகர்கள், இந்தத் தொடர் படங்களில் இருந்து என்ன எதிர்பார்ப்பார்களோ அதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் திரைக்கதையாசிரியர் க்றிஸ் மார்கன். கதை, லாஜிக் எல்லாம் இரண்டாம் பட்சமே! ரோலர் கோஸ்டரில் இரண்டு சுற்று போய் வந்தது போன்ற உணர்வை தரக்கூடிய பொழுதுபோக்குச் சித்திரம். அதனால் தான் உலகளவில் வசூலில் ரெக்கார்ட் பிரேக் சாதனை புரிந்து வருகிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்றாலே விர்ர்ரூம் எனச் சீறும் கலர் கலரான கார்கள் தானே ஞாபகம் வரும். இப்படத்தில் ஒரு படி மேலே சென்று, "கார் மழை"யைப் பொழிந்துள்ளார் இயக்குநர் கேரி க்ரே. விஷூவலால் வாயடைக்க வைக்கின்றனர். 'தெறி மாஸ்' என்ற பதம் இப்படத்திற்கு மிகப் பொருந்தும். வில்லனாய் உள்ளே வந்த ஜேஸன் ஸ்டாத்தமை, டொமினிக் டீமு...