டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்
2010இல் தொடங்கியது ‘டெஸ்பிக்கபிள் மீ’ தொடர். அதில் வரும் மினியன்ஸ் எனும் திரைப்பாத்திரங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த பரவலான வரவேற்பின் காரணமாக வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. சமீபத்தில், மினியன்ஸ் போன்று மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்ற திரைப்பாத்திரம் வேறில்லை என்றே சொல்லவேண்டும். சமூக வலைத்தளங்களில் எமோட்டிகான்களாகப் பயன்படுத்தப்படும் மினியன்ஸ், மக்களின் எல்லா விதமான உணர்ச்சிகளையும் தங்கள் சின்னஞ்சிறு மஞ்சள் உருவங்களின் மூலம் பிரதிபலிக்கின்றன. மக்களுக்கு மினியன்ஸிடமுள்ள மோகத்தினை மனதில் கொண்டே, யுனிவர்சல் பிக்சர்ஸ் முதல் முறையாக டெஸ்பிக்கபிள் மீ தொடரில் வந்திருக்கும் மூன்றாம் பாகத்தைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
முந்தைய பாகங்களில், வெறுக்கத்தக்க வில்லனாக இருந்து, மூன்று அநாதை சிறுமிகளுக்கு நல்ல தகப்பனாக மாறி, லூசி வைல்டின் கரம் பிடித்து ஏ.வி.எல்.(Anti-Vill...