Shadow

Tag: Minister Jayakumar

“ஆதலால் காதல் செய்வீர்!” அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி மந்திராலோசனை

“ஆதலால் காதல் செய்வீர்!” அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி மந்திராலோசனை

சமூகம், மற்றவை
உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் தினங்களில் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில், நாட்களில், மணித்திலாயங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல். ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் புதுமலராய் பூத்தவண்ணம் இருக்கிறது. இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்களும் இளைஞர்களும் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் தமிழக அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்குப் புதிய அடையாளம் ஒன்றினைக் கொடுத்துள்ளார். தன் பேரனைத் தோளில் சுமந்து, "ஹாப்பி வேலண்டைன்ஸ் டே" என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்துப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இந்தப் படம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், "பிப்ரவரி 14 என்பதைப் பலரும் காதலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அப்படின்னு நினைச...
பந்தா பண்ணாத அமைச்சர் – அதிகாரிகள் திகைப்பு

பந்தா பண்ணாத அமைச்சர் – அதிகாரிகள் திகைப்பு

அரசியல்
சென்னை மெரினாவில் சென்னையின் பெருமையைக் கொண்டாடும் வகையில் 'நம்ம சென்னை' என்ற செல்ஃபி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வருவதால் களைகட்டி இருந்தது மெரினா கடற்கரைச் சாலை. முதல்வர் வருகை என்பதால் காவல்துறை உயரதிகாரிகள் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்புப் பணிக்காக நின்றிருந்தனர். கடற்கரைச் சாலையில் முதல்வர் வருவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த நேரத்தில் தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் வேகமாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார். முதல்வர் வரும்போது யாரும் குறுக்கே வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அந்த மனிதரை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது. ஆனால் அருகில் சென்ற காவலர்கள், அம்மனிதர், நபர் அமைச்சர் ஜெயக்குமார் என்றறிந்து திகைத்துப் ப...
ஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்

ஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்

அரசியல்
1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து, உச்சிமுகர்ந்து, அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுக்கு ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார். ஜெயவர்தன் பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். 22 ஆவது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன். படித்து முடித்த போது வயது 24 அவருக்கு, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம். 2013 டிசம்பர் ...
அமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்

அமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்

அரசியல்
அதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் களைகட்டி இருந்தன. ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து காரில் வந்தால் சரிப்பட்டு வராது, நேரத்திற்குs செல்ல முடியாது, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாது என்று எண்ணினார் அமைச்சர் ஜெயக்குமார். அதிரடியாக கட்சி நிர்வாகி ஒருவரது பைக்கில் அதிமுக கொடியை ஏந்தியபடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார். சென்னையின் பல்வேறு சாலைகளில் அமைச்சர் கொடியை ஏந்தியபடி செல்...
தமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்!

தமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்!

அரசியல், சமூகம்
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் யாருமே பார்த்திராத வகையில் வலம் வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும் சரி, அலுவலக ரீதியாகவும் சரி எப்போதுமே அதிரடியாக இருக்கும். களத்தில் இறங்கினால் அதிரடி ஆட்ட நாயகனாக மக்களோடு மக்களாகத் தன்னை இணைத்துக் கொள்வதில் முன்னோடியாகவே இருக்கிறார். எத்தனையோ சோதனைகள், சங்கடங்கள், தோல்விகள், தேவையற்ற வீண் வதந்திகள், விமர்சனங்கள், பழிவாங்கல்கள்,போட்டி, பொறாமை என எது வந்தாலும் அவற்றைப் புன்சிரிப்போடு எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். கல்லூரிக் காலகட்டங்களில் இருந்த அதே மனநிலையோடு தான் இன்னமும் மனதை இளமையாக வைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது தொடர் வெற்றிக்கும் இதுவே காரணமாக அமைகின்றது. தொகுதி மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பது மட்டுமல்ல இவரது அரசியல், அதைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்து மக்களின் பிரச்சனை எது...
அமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்

அமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்

அரசியல், சமூகம்
தமிழகத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்களைக் கௌரவிக்கும் விதத்தில் ஜீ குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. வருடம்தோறும் வழக்கமாக சிறந்த சீரியல் நடிகர் நடிகைகளைக் கௌரவப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சருக்குச் சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது ஜீ தமிழ். கொரோனா காலகட்டத்தில் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தினமும் மக்களோடு பயணித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பொது மக்களுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் காட்டி வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார். பேரிடர் காலத்தில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று மக்கள் பணி...