Bramayugam விமர்சனம்
கேரளத்தில் நாட்டார் கதைகள், தமிழின் தொன்மையைப் போலவே மிகப் பிரபலமானதாகும். 18 ஆம் நூற்றாண்டில், கேரளத்தில் வாழ்ந்த கொட்டாரத்தில் சங்குண்ணி (Kottarathil Sankunni) என்பவர். மக்களிடையே பேசப்பட்ட நாட்டார் கதைகள் அனைத்தையும் ஐதீயமாலா (Aithihyamala) என்ற தொகுப்பாகக் கொண்டுவந்தார். எட்டு பாகங்களில் சுமார் 126 கதைகள், இந்தத் தொகுப்பில் இருக்கிறது. இன்றைக்கும் இந்தத் தொகுப்பு கேரளாவில் மிகப் பிரபலமானவை. இந்தக் கதைகள் அனைத்தும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் சம்பவங்கள், மந்திரவாதிகள் மற்றும் பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்து செல்வங்களைக் காக்கும் அழகு மிக்க பெண்கள், யோகக்கலை, மன்னர்கள் மற்றும் களரிப்பயிற்று வல்லுநர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், யானைப்பாகன்கள் மற்றும் தந்திர நிபுணர்கள் என பலத்தரப்பட்ட மனிதர்கள் பற்றி அமைந்துள்ளன. இந்தக் கதைகளில் ஒன்றாக குஞ்சாமோன் போற்றி எனும் மந்திரவாதி பற்றிய கதையும...