Shadow

Tag: Moothin mullai vimarsanam

மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

இது புதிது, கட்டுரை, புத்தகம்
அண்ணன் டேனியல் அவர்களின் தலைப்பிள்ளை இந்த நாவல். தலைப்பிலே நம்மை மிரள வைத்துவிட்டார். மூத்தக்குடி என்பதன் பொருளாக இத்தலைப்பை நாவலுக்குச் சூட்டியுள்ளார். மூத்தக்குடிகளின் பாட்டுடைத் தலைவிகளாக இந்நாவலில் பெண்களே வியாபித்திருக்கிறார்கள். நாவல் பற்றிப் பேசும் முன் அண்ணன் டேனியல் பற்றிப் பார்ப்போம். எப்பொழுதுமே தேடலிலே திரியும் மனிதர். அவர் உடலின் வெயிட்டுக்கும், வாழ்வில் அவர் சந்தித்த கனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. "இந்த உடம்பாடா இதெல்லாம் தாங்கியது" என்றே தோன்றும். அடியேனுக்கு அவரது அகவாழ்வு சேஷ்டைகளும் புரியும். புற வாழ்வு கஷ்டங்களும் தெரியும் என்பதால் நான் அவரிடம் இருந்து வேறோர் நாவலை எதிர்பார்த்தேன். வாழ்வு போலவே அவரின் நாவலும் சற்றும் எதிர்பாராத அனுபவத்தைத் தந்தது. அவரின் நாவல் படைப்புக்கு இதயமாக இருந்தவர் நண்பர் தினேஷ் ராம். முருகன் மந்திரம் சார் இதயத்தைத் தனது மதிமகிழ் பதிப்பகம் ச...