முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம்
நிலம் சார்ந்த போராட்டத்தை மையப்படுத்திய படமாக முஃபாசா அமைந்துள்ளது.
பெரு வெள்ளத்தில் தன் தாய் தந்தையரைப் பிரிந்த, முஃபாசா என்ற குட்டிச் சிங்கம், இன்னொரு நிலம் வந்தடைகிறது. ஆறு, மலை கடந்து தான் வாழ ஒரு நிலமும், அங்கு தன் இனமும் இருப்பதாக முஃபாசாவிற்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. நிலம் மாறி வந்த முஃபாசாவிற்கு டேக்கா எனும் குட்டிச் சிங்கம் தன் தாய் தந்தையிடம் பேசி, தங்கள் நிலத்தில் தங்குவதற்கு அனுமதி வாங்குகிறது. இரு சிங்கங்களும் நண்பர்களாக வளர்கின்றனர். இவர்கள் வாழும் நிலத்தை அபகரிக்க வெண்சிங்கப்படை ஒன்று வருகிறது. அந்தப் படையை எதிர்கொள்ள இயலாமல் டேக்கா, முஃபாசா இருவரும் வெளியேறுகிறார்கள். வெளியேறும் போது நடக்கும் சண்டை ஒன்றில், வெண்சிங்கப் படையின் இளவரச சிங்கத்தை, முஃபாசா கொன்றுவிடுகிறது. இதனால் வெண்சிங்க ராஜா முஃபாசாவை பலி வாங்கத் துரத்துகிறது. துரத்தலை ஒரு கட்டத்தில் நேர்கொள்ளும் முஃபாசா எ...