Shadow

Tag: Napoleon movie review in Tamil

நெப்போலியன் விமர்சனம்

நெப்போலியன் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நெப்போலியனின் மொத்த வாழ்க்கையையும் மூன்று வார்த்தையில் அடக்கிவிடலாம். படம் முடியும்பொழுது, அவர் இறக்கும் முன் கடைசியாக உதிர்த்த வார்த்தைகளைத் திரையில் காட்டுகின்றனர். அவை, ஃபிரான்ஸ், படை (Army), ஜோசஃபின் ஆகும். அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமான இம்மூன்றும் தான் நெப்போலியனின் வாழ்க்கையும், இந்தப் படத்தின் திரைக்கதையும் ஆகும். இப்படம், நெப்போலியனை ஒரு காவிய நாயகனாகக் கொண்டாடவில்லை. மாறாக, அவரை ஒரு சக மனிதராகத் திரையில் முன்னிறுத்தி, ரிட்லி ஸ்காட் ஒரு காவிய படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபலமான ஆங்கிலக் கவிஞரான பைரான் பிரபு, நெப்போலியனை ஒரு ரொமான்ட்டிக் நாயகனாகவும், தனிமையில் சிக்கிய, இடருக்கு உள்ளான குறைப்பாடுள்ள மேதைமையாகப் பார்த்தார். கிட்டத்தட்ட ரிட்லி ஸ்காட்டின் இப்படமும் அதையே பிரதிபலிக்கிறது. போர்க்களத்தில் இருந்து, அவர் தன் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் மிகப் பிரபலம். போர்க்களத்தில், ...