Shadow

Tag: Netflix movie thiraivimarsanam

The Platform விமர்சனம்

The Platform விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடந்த பத்து ஆண்டுகளில் நான் பார்த்த படங்களிலேயே, என்னை மிகவும் பாதித்த, யோசிக்க வைத்த மிக முக்கியமான திரைப்படம் இது. இந்த ஸ்பானிய மொழி திரைப்படம், நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது. ஸ்பான்டேனியஸ் சாலிடாரிட்டி, அதாவது, பிரச்சனையின் போது மக்கள் இயல்பாகவே ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து போராடுகிறார்களா அல்லது விட்டுக் கொடுக்கிறார்களா இல்லையா என்பதை அறிவதற்காக நடத்தப்படும் மிக அபாயகரமான சோதனை தான் இப்படத்தின் களம். இது தவிர, இந்தப் படம், மக்களாட்சித் தன்மையில் அதிகாரத்தில் இருப்பவருக்கும், அவருக்குக் கீழே அவனை நம்பி பிழைப்பு நடத்தும் எளிய மனிதனுக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் யோசிக்க வைக்கிறது. முந்நூறு அறைகளைக் கொண்ட செங்குத்து அபார்ட்மென்ட்டில், ஒவ்வொரு அறையிலும் இரண்டு பேர் இருப்பார்கள். அந்த அறைக்கு நடுவில், மேலே முதல் அறையில் இருந்து கீழிருக்கும் 300க்கும் மேற்பட்ட அறைகளுக்குச் செல்லும் ம...
Afterlife of the party விமர்சனம்

Afterlife of the party விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடப் பார்ட்டிக்குச் செல்லும் கேஸி, பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். இறந்த கேஸி, சொர்க்கத்திற்கும் செல்லாமல், நரகத்திற்கும் செல்லாமல் இடைப்பட்ட ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். ஐந்து நாளில், அவளது மரணத்தில் பாதிக்கப்பட்ட அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்க்கையில் கார்டியன் ஏஞ்சலாக இருந்து உதவினால், மேலே சொர்க்கத்திற்குச் செல்லலாம். இல்லையேல் கீழே நரகத்திற்குச் செல்ல வேண்டி வருமென்று கேஸிக்குச் சொல்லப்படுகிறது. கேஸியால், எவ்விதச் சக்திகளுமற்ற கார்டியன் ஏஞ்சலாக இருந்து தன் தோழிக்கும், அம்மாவுக்கும், அப்பாவுக்கும் உதவ முடிந்ததா என்பதே படத்தின் கதை. இயக்குநர் ஸ்டீஃபன் ஹெரெக், தத்துவார்த்தமாகவும் இறங்காமல், முழுநீள நகைச்சுவையாகவும் இல்லாமல், சென்ட்டிமென்ட்டையும் கூட்டாமல், அனைத்துக்கும் பொதுவானதொரு இடைவெளியில் படத்தைக்...