Shadow

Tag: Netru Indha Neram

நேற்று இந்த நேரம் விமர்சனம்

நேற்று இந்த நேரம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாயகனும் நாயகியும் மூன்றாண்டுகளாகக் காதலிப்பதைக் கொண்டாட நினைக்கின்றனர். மேலும், கல்லூரி வாழ்க்கை முடிவதாலும், நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் என இளைஞர்கள் எழுவர் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாக்கு வந்த இடத்தில் நாயகன் காணாமல் போகிறார். நாயகனுக்கு என்னானது என்ற புலனாய்வு விசாரணையே படத்தின் கதை. ‘ராஷோமோன் (1950)’ எனும் ஜப்பானியத் திரைப்படப் பாணியில், கதாபாத்திரங்கள் அனைவரும் காணாமல் போன நாயகனைப் பற்றிச் சொல்கின்றனர். நாயகனைப் பற்றிய விவரணை நண்பர்களின் பார்வையிலிருந்து விரிகிறது. அந்த விவரணையில், நாயகன், எதிர் நாயகனாக மெல்ல மாற்றம் பெறுகிறான். காணாமல் போன நாயகனே கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், மேலும் ஒரு நண்பன் காணாமல் போகிறான். ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா ஆகியோர் நடித்துள்ளனர். கெவின். N இசையமைக்...
நேற்று இந்த நேரம் | காணாமல் போன நண்பர்களும், திடுக்கிடும் சம்பவங்களும்

நேற்று இந்த நேரம் | காணாமல் போன நண்பர்களும், திடுக்கிடும் சம்பவங்களும்

சினிமா, திரைத் துளி
கிளாப்இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி இயக்கி இருக்கும் த்ரில்லர் திரைப்படம் "நேற்று இந்த நேரம்" ஆகும். பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். க்ரைம் திரில்லர் பாணியில் சுவாரசியமாக திரைக்கதை அமைத்து இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. கெவின்.N இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.ந மேற்கொண்டுள்ளனர்...