Shadow

Tag: Pandigai movie

பண்டிகை விமர்சனம்

பண்டிகை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் சண்டைப் போட்டிக்குப் பெயர் தான் பண்டிகை. பணத் தேவையின் பொருட்டு, நாயகன் கிருஷ்ணாவைப் பண்டிகையில் தோற்கும்படி பேசித் தயார் செய்கிறார் சித்தப்பு சரவணன். நாயகனோ சண்டையில் வென்று விட, சரவணனோ குடும்பம், வீடு, கடை என அனைத்தையும் இழந்துவிடுகிறார். அதிலிருந்து சரவணனை நாயகன் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. விறுவிறுப்பான முதற்பாதி ஒரு கதையாகவும்; இரண்டாம் பாதியைத் தனிக் கதையாகவும் கொண்டு திரைக்கதை நீள்கிறது. கிருஷ்ணாவின் கேரியரில் இது அவருக்கு மிக முக்கியமான படமாக அமையும். படபடப்பாகப் பேசி, சதா துள்ளலான உடல்மொழியுடன் தோன்றும் கதாபாத்திரங்களை விட, இந்த சீரியசான ரோல் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. அறிமுக இயக்குநர் ஃபெரோஸ், கிருஷ்ணாவிடமிருந்து மிகத் தேர்ந்த நடிப்பை வாங்கியுள்ளார். படத்தின் ஆச்சரியங்களில் ஒன்றாக நிதின் சத்யா உள்ளார். முந்திரி சேட்ட...
பண்டிகையின் மூன்று பாடல்

பண்டிகையின் மூன்று பாடல்

சினிமா, திரைத் துளி
ரங்கூன் படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் R.H.விக்ரமின் அடுத்த படம் 'பண்டிகை '. இந்தப் படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலக்ஷ்மி தயாரித்துள்ளார். இப்படத்தைக் குறித்து இசையமைப்பாளர் R.H. விக்ரம் பகிர்ந்து கொள்கையில், ''பெரோஸ் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவருடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியாகவும் சுலபமாகவும் இருந்தது. இப்படத்தில் 3 பாடல்கள் மட்டுமே எனத் தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் நானும் பெரோஸும் உறுதியாக இருந்தோம். இப்படத்தின் முதல் பாடல் 'காங்ஸ்டர் ராப்' வகையைச் சேரும். இப்படத்தின் கதைக்களத்தைத் தெளிவாகச் சித்தரிக்கும் பாட்டு இது. கதாநாயகன் , வில்லன் மற்றும் மக்கள் கோணத்தில் எழுதப்பட்ட பாட்டு இது. இந்தச்...
பண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா

பண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா

சினிமா, திரைத் துளி
கிருஷ்ணா நடிப்பில், அறிமுக இயக்குநர் பெரோஸ் இயக்கத்தில், வருகின்ற 14 ஆம் தேதி வெளி வரவுள்ள படம் பண்டிகை. "கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வைத் தந்ததோ, அதே உணர்வைப் பண்டிகை படமும் தருகிறது. இயக்குநர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம், அவரது இலக்கு வெற்றி மட்டுமே என்பதைச் சொல்லும். சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப் பட்ட இந்தக் கதை என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதைத் தீர்மானமாகச் சொல்ல முடியும். அன்பு - அறிவு இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்து ஹீரோ தரும் என்பதும் உத்திரவாதம். இந்தப் படத்தில் எனக்கு இணையாக நடித்துள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றிப் பட நாயகி ...