போர் தொழில் விமர்சனம்
யூகித்தறிய முடியாத கொலைக் குற்றங்களைத் துப்பறியும் இரு காவலர்களின் கதை.
காவலர் வேலை என்பது போர்த் தொழிலுக்கு நிகரானது. வேலைக்கான அவார்டும் ரிவார்டும் நம் எதிரிலேயே அடுத்தவங்களுக்குச் செல்லும் சூழலும் காவல்துறை பணியில் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கியும், ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ எனப் பணியாற்றும் கம்பீர அதிகாரி சரத்குமார். அவருடன் வேலை பழகும் வேட்கையுடன் வந்து இணைகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகளுக்கான காரணி என்ன, கொலைகளை நிகழ்த்திய கர்த்தா யார் என சரத் - அசோக் செல்வன் கூட்டணி நூல் பிடித்துக் கண்டுபிடிப்பதே படத்தின் முழுக்கதையும்.
நாடி நரம்பெல்லாம் க்ரைம் டிப்பார்ட்மென்ட் காவல் அதிகாரி மேனரிசம் ஊறிப்போன ஒருவரால் தான் இப்படி நடிப்பில் அசரடிக்க முடியும். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சரத்குமார்....